வரி தாக்கல் எண்ணுக்கு (TFN) விண்ணப்பியுங்கள்
உங்களது வரி தாக்கல் எண் (TFN) என்பது:
- உங்களது ‘வரி மற்றும் பணிஓய்வு’ கணினி அமைப்புகளில் இருக்கும் உங்களுக்கான தனிப்பட்ட குறிப்பு எண் ஆகும்
- அது, உங்களது ‘வரி மற்றும் பணிஓய்வுப்’ பதிவேடுகளின் ஓர் முக்கியமான அங்கமும், அதே போல உங்களது அடையாளமுமாகும் – ஆகவே இதைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
- இது ஆயுளுக்கும் உங்களுடையதே – உங்களது பெயரை, வேலையை மாற்றிக் கொண்டாலும், மாநிலம் விட்டு மாநிலம் குடிமாறிச் சென்றாலும் அல்லது வெளிநாட்டிற்கே சென்று விட்டாலும் கூட, இதே TFN எண்ணை வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் TFN எண் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியமேதுமில்லை, ஆனால் அப்படியொரு எண் இல்லை என்றால் நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். உங்களால் அரசாங்கப் பலன்களுக்கு விண்ணப்பிக்கவும், மின்னணு வசதி மூலம் உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்யவும் அல்லது ஆஸ்திரேலிய வியாபார எண் (ABN) ஒன்றைப் பெறவும் இயலாமற் போகும்.
TFN ஒன்றுக்கு விண்ணப்பியுங்கள்
TFN ஒன்றுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது உங்களது சூழ்நிலைகளைப் பொருத்தே இருக்கும்:
அயல்நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், நிரந்தரமான குடிவரவாளர்கள் மற்றும் தற்காலிகமாக வந்திருப்பவர்கள்
நீங்கள் பின்வரும் மூன்று நிபந்தனைகளைச் சந்திக்கிற பட்சத்தில் உங்களால் ‘வரி தாக்கல் எண்' ஒன்றுக்கு இணைய வாயிலாக விண்ணப்பிக்க முடியும்:
- நீங்கள் அயல்நாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவர், நிரந்தரமான குடிவரவாளர் அல்லது தற்காலிகமாக வந்திருப்பவர்.
- நீங்கள் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள்.
- உங்களது வீசா பின்வருவதில் ஒன்றாக இருக்கிறது:
- அது ஒரு நிரந்தர குடியுரிமை விசா
- அது ஓரு பணி புரிவதற்கான உரிமைகள் கொண்ட வீசா
- அது ஓரு அயல்நாட்டு மாணவர் வீசா
- அது உங்களை வரம்பற்ற காலத்திற்கு ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு அனுமதிக்கிறதோர் வீசா (இது நியூஸிலாந்து நாட்டவர்களுக்கு வந்திறங்கியதும் தானாகவே கொடுத்து விடுகிற வீசா ஒன்று உட்பட).
TFN ஒன்றுக்கு இணைய வாயிலாக விண்ணப்பியுங்கள்இணைய வாயிலாக விண்ணப்பிப்பதற்கு, உங்களிடம் ஒரு செல்லுபடியாகிற கடவுச்சீட்டு அல்லது உரிய பயண ஆவணங்கள் இருந்தாக வேண்டும்.
உங்களது கடவுச்சீட்டு அல்லது அடையாள ஆவணங்களை எங்களுக்கு அனுப்பி வைக்காதீர்கள் – நாங்கள் உங்களது அடையாளத்தை உள்துறை அமைச்சகப் பதிவேடுகளோடு சரிபார்த்துக் கொள்வோம்.
28 நாட்களுக்குள், உங்களது விண்ணப்பத்தில் நீங்கள் எங்களுக்குத் தருகிற ஆஸ்திரேலிய முகவரிக்கு நாங்கள் உங்களது TFN எண்ணை அனுப்பி வைத்து விடுவோம்.
உங்களது TFN உங்களுக்கு வந்து சேர்ந்ததும், அடையாளத் திருட்டைத் தடுப்பதற்காக, நீங்கள் அதையும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது முக்கியமானதாகும்.
பணிபுரிவதற்கான வீசா
செல்லுபடியாகிற பணி புரிவதற்கான வீசாக்களில் அடங்குபவை:
- விடுமுறை கால சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் (துணைவகுப்பு 417)
- பொழுதுபோக்கு (துணைவகுப்பு 420)
- விளையாட்டு (துணைவகுப்பு 421)
- பணிபுரிந்து கொண்டே, சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் (துணைவகுப்பு 462).
தஞ்சம் நாடுவோர்
தஞ்சம் நாடுவோர், ஒரு பிரிட்ஜிங் வீசாவையும், அவர்களது கடவுச்சீட்டையும் உபயோகித்துக் கொள்ளலாம் அல்லது பயண ஆவண எண்ணே அவர்களது IMMI அட்டை எண்ணாக இருக்கும். ஆயினும், முந்தைய அடையாள அட்டைகளைப் பொருத்த வரையில், கடவுச்சீட்டு அல்லது பயண ஆவண எண்ணானது PLO56 அல்லது PL56 ஆக இருக்கும்.
ஆஸ்திரேலியக் குடிமக்கள் அல்லது ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்
நீங்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றால் அல்லது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றிருக்கிறீர்கள் என்றால், உங்களால் இந்தச் சேவையை உபயோகிக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் குடியிருப்பவர்கள் - TFN விண்ணப்பம் என்பதற்குச் செல்க.
இதையும் பாருங்கள்:
ஆஸ்திரேலியாவில் குடியிருப்பவர்கள்
நீங்கள் ஆஸ்திரேலியாவில் குடியிருப்பவராக இருந்தால், நீங்கள் உங்கள் சூழ்நிலையைப் பொருத்து பல்வேறு விதங்களில் வரி தாக்கல் எண்ணுக்கு (TFN) விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் TFN ஒன்றுக்கு விண்ணப்பிக்கும் விதங்கள்:
ஆஸ்திரேலியா போஸ்ட்-ல் விண்ணப்பியுங்கள்
நீங்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பவராக இருந்து, நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ள இயலுமானால், நீங்கள் ‘பார்ட்டிசிபேட்டிங் ஆஸ்திரேலியா போஸ்ட் ரீட்டெய்ல் அவுட்லெட்External Link ஒன்றில் TFN எண்ணுக்காக விண்ணப்பிக்கலாம். TFN விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்வதற்குக் கட்டணம் எதுவுமில்லை.
நீங்கள் ஆஸ்திரேலியாவில் குடியிருப்பவராக இருந்தால், TFN ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான மிகவும் எளிதானதோர் வழி என்பது:
- இணைய வாயிலாக படிவத்தைப் பூர்த்தி செய்வதேயாகும்External Link.
- உங்களது விண்ணப்பப் பார்வை எண் அடங்கிய சுருக்கத் தகவலை அச்சிட்டுக் கொண்டு, அதனை உங்களது ஆஸ்திரேலியா போஸ்ட் நேர்காணலுக்கு எடுத்துச் செல்லுங்கள்.
- உங்களது ஆன்லைன் படிவத்தைப் பூர்த்தி செய்த 30 நாட்களுக்குள் ‘பார்ட்டிசிபேட்டிங் ஆஸ்திரேலியா போஸ்ட் அவுட்லெட்’ ஒன்றில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் அச்சிட்டு வைத்துள்ள சுருக்க விவரத்தையும், அடையாள ஆவணங்களின் அத்தாட்சியையும்External Link நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் நேர்காணலை நிறைவு செய்யும் போது ஆஸ்திரேலியா போஸ்டில் உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டியிருக்கும்.
அடுத்த படி:
ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் ஆவணங்கள்
உங்களது விண்ணப்பத்திற்கு ஆதரவாகக் கொடுத்துள்ள அடையாள ஆவணங்களின் அத்தாட்சி நகல்களை, அவற்றின் அசல் ஆவணத்தின் உண்மையானதும், சரியானதுமான நகல்கள் என்று சான்றளிக்க வேண்டும்.
நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியிருக்காத ஆவணங்களைக் கொடுக்கிறீர்கள் என்றால், அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்புச் சேவை நிறுவனம் ஒன்று செய்த ஆங்கில மொழி பெயர்ப்பு ஒன்றையும் கொடுத்தாக வேண்டும்.
அனைத்து மொழிபெயர்ப்புகளிலும், ‘பார்த்த ஆவணத்திலிருந்து செய்த உண்மையானதும், சரியானதுமான மொழிபெயர்ப்பு’ என்று அதனை மொழிபெயர்த்த அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளரின் சான்றறிக்கை ஒன்றையும் சேர்த்தாக வேண்டும்.
அந்த மொழிபெயர்ப்பில், சான்றளிப்பவர் பெற்றுள்ள சான்றைக் காண்பிக்கிற அதிகாரப்பூர்வ முத்திரை அல்லது அதையொத்த ஒன்றும் தோன்ற வேண்டும்.
மொழிபெயர்ப்போடு, அங்கீகாரம் பெற்ற சான்றளிக்கும் நிறுவனம் ஒன்றினால், உண்மையானதும், சரியானதுமான நகல் என்பதாக முத்திரையிட்டு, கையொப்பமிட்டுள்ள, மூல மொழியில் இருக்கிற அசல் ஆவணத்தின் சான்று பெற்ற நகல் ஒன்றும் இருக்க வேண்டும்.
ஒரு சேவைகள் ஆஸ்திரேலியா (Centrelink) மையத்தில் விண்ணப்பிக்கவும்
நீங்கள் ஒரு செர்வீசஸ் ஆஸ்திரேலியா (Centrelink) வாடிக்கையாளராக இருந்து, நீங்கள் ஆஸ்திரேலியாவில் குடியிருப்பவராக இருந்தால், TFN ஒன்றுக்கு ஆஸ்திரேலியா போஸ்டில் விண்ணப்பித்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ளலாம்.
உங்களால் ஆஸ்திரேலியா போஸ்ட் சேவையைப் பயன்படுத்த இயலவிலாமல் இருந்து, நீங்கள் ஒரு செர்வீசஸ் ஆஸ்திரேலியா (Centrelink) வாடிக்கையாளராக இருந்தால், நீங்கள் செர்வீசஸ் ஆஸ்திரேலியா (Centrelink)External Link மையம் ஒன்றில் நேரில் போய், ஒரு காகித வரி கோப்பு எண் - விண்ணப்பம் அல்லது தனிநபர்களுக்கான விசாரணை (NAT 1432) படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உங்களுடைய அடையாள ஆவணங்கள் அனைத்தும் அசல் ஆவணங்கள் தான் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் - உங்களுக்கு தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்களுக்கு படிவத்தில் உள்ள வழிமுறைகளைப் பார்க்கவும்.
நீங்கள் ATO -வில் இருந்து உங்கள் TFN ஐ பெறுவதற்கு உங்களிடம் அங்கீகாரம் பெற்ற செண்டர்லிங் இருந்தால்:
- உங்களுக்கு TFN ஒன்று அவசியமாவதற்கான காரணமாக 'செண்டர்லிங்கிற்கு கொடுப்பதற்கு' என்பதாகத் தேர்ந்தெடுக்கவும்.
அது குறித்து நடவடிக்கை எடுத்ததும், நாங்கள் செண்டர்லிங்கிற்கு உங்கள் TFN ஐ அனுப்பி வைப்போம்.
அஞ்சல் மூலம் விண்ணப்பியுங்கள்
உங்களால், பங்கேற்கும் ஆஸ்திரேலியா போஸ்ட் சில்லறை விற்பனையாளர் நிலையம் ஒன்றில் நடைபெறும் நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது நீங்கள் செர்வீசஸ் ஆஸ்திரேலியா (Centrelink) வாடிக்கையாளர் ஒருவராக இல்லை என்றாலோ, நீங்கள் ஒரு காகித வரி கோப்பு எண் - விண்ணப்பத்தை அல்லது தனிநபர்களுக்கான விசாரணைப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
உங்களால் பின்வரும் வழிகளில், இந்தப் படிவத்தின் நகல் ஒன்றை பெற முடியும்:
- இணையத்தில் பதிவு செய்து வாங்குவதுExternal Link
- தொலைபேசியில் அழைப்பதன் மூலம் 1300 720 092 நாளுக்கு மணி நேரமும் 24, வாரத்தில் 7 நாட்கள். நீங்கள் ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியில் எங்களிடம் பேச விரும்பினால், நீங்கள் உங்களது அழைப்பில் உதவுவதற்கு 13 14 50 என்ற எண்ணில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவை வசதியை அழைக்கலாம்.
உங்களது பூர்த்தி செய்த TFN விண்ணப்பத்தையும், உங்களது அடையாள ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களையும் படிவத்தில் தந்துள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குறிப்பு: உங்களது அசல் அடையாள ஆவணங்களை அஞ்சலில் எங்களுக்கு அனுப்பி வைக்காதீர்கள் – அவை உங்களுக்குத் திரும்பி வராமல் போய்விடலாம்.
ஆஸ்திரேலியாவிற்கு வெளியே வசிப்பவர்கள்
வரி செலுத்தும் நோக்கங்களுக்காக, நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே குடியிருப்பவராக இருந்து, நீங்கள் ஆஸ்திரேலிய மூலாதாரம் ஒன்றிலிருந்து வட்டி, டிவிடெண்டுகள் அல்லது ராயல்டி பணப்பட்டுவாடாக்களை மட்டுமே பெற்றுக் கொள்கிற பட்சத்தில், உங்களுக்கு TFN ஒன்று அவசியமில்லை.
நீங்கள் இந்த வருமானத்தை ஆஸ்திரேலிய வரிக்கணக்கில் தெரிவிக்க வேண்டியதில்லை. பணம் செலுத்தும் நேரத்தில், ஆஸ்திரேலிய நிதி ஸ்தாபனம் (உங்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிறுவனம்), ஓர் இறுதி பிடித்துவைக்கும் வரி ஒறைக் கழித்துக்கொள்ளும்.
அடுத்த படி:
ஆயினும், ஒரு ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கில் இருந்து பிடித்து வைத்துள்ள அல்லது ஆஸ்திரேலிய பங்குகளில் இருந்து பெற்ற டிவிடெண்டுகளில் இருந்து பிடித்து வைத்துள்ள வரியைத் திரும்பத் தருமாறு கோருவதற்காக, ஆஸ்திரேலிய வருமான வரி தாக்கல் ஒன்றைச் செய்ய வேண்டுமானால், உங்களுக்கு ஒரு TFN எண் அவசியமாகும்.
பின்வரும் நிலையில், நீங்கள் TFN ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்:
- வட்டி, டிவிடெண்டுகள் அல்லது ராயல்டி பணப்பட்டுவாடாக்கள் தவிர மற்றதோர் ஆஸ்திரேலிய மூலாதாரம் ஒன்றிலிருந்து உங்களுக்கு வருமானம் வருகிறது
- உங்களது வாழ்க்கைத் துணை ஆஸ்திரேலியவில் வசிப்பவராக இருந்து, ‘ஃபேமிலி டேக்ஸ் பெனிஃபிட்’-க்கு விண்ணப்பிக்கிறார்
- நீங்கள் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி உறுப்பினராக இருக்கிறீர்கள் அதோடு
- அதிலிருந்து பலன்கள் பெற எதிர்பார்க்கிறீர்கள்
- நீங்கள் அதற்குத் தனிப்பட்ட பங்களிப்பு செய்ய எதிர்பார்க்கிறீர்கள், அல்லது
- உங்கள் சார்பாக அதில் பங்களிப்பு செய்கிறார்கள்
- நீங்கள் ஆஸ்திரேலிய வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது அல்லது ஆஸ்திரேலிய வியாபார எண்ணுக்கு (ABN) விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
அடுத்த படி:
இதையும் பாருங்கள்:
Your tax file number (TFN) is your personal reference number in the tax and super systems – Tamil translation.