Show download pdf controls
  • நீங்கள் கோரிப்பெற முடிகிற பிடித்தங்கள்

    உங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்து முடிக்கும் போது, சில செலவினங்களுக்கான பிடித்தங்களை உங்களால் கோரிப்பெற இயலும். அவற்றில் பெரும்பாலானவை, உங்களது வேலைவாய்ப்பினால் சம்பாதித்த வருமானத்தைச் சம்பாதிக்க நீங்கள் செலவிட்ட செலவினங்களாகும்.

    இந்தப் பக்கத்தில்:

    வேலை தொடர்பான செலவினங்கள்

    வேலை தொடர்பான செலவினம் ஒன்றுக்கான பிடித்தத்தைக் கோரிப்பெற:

    • அந்தப் பணத்தை நீங்களே தான் செலவு செய்திருக்க வேண்டும் அதோடு அதைத் திரும்பப் பெற்றிருக்காதிருக்க வேண்டும்
    • அச்செலவுகள், உங்களது வருமானத்தைச் சம்பாதிப்பதோடு நேரடித் தொடர்புடையதாக இருக்க வேண்டும்
    • அதை நிரூபிப்பதற்கானதோர் பதிவு உங்களிடம் இருந்தாக வேண்டும். (வழக்கமாக அது ஒரு இரசீது).

    அச்செலவுகளானவை, வேலைக்கும், தனிப்பட்ட நோக்கங்களுக்குமானவையாக இருக்கிற பட்சத்தில், நீங்கள் அந்த வேலை தொடர்பான பகுதிக்கு மட்டுமே கோரிப்பெற வேண்டும். உங்களைப் பணியமர்த்தியுள்ளவர் திருப்பிக் கொடுத்துவிட்ட வேலைச் செலவினங்கள் பிடித்தம் செய்யக்கூடியவையல்ல.

    உங்களது செலவினங்களை உங்களைப் பணியமர்த்தியவர் கொடுத்திருக்கலாம் என்பதாக நாங்கள் கருதினால், நாங்கள் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

    பின்வருபவை உள்ளிட்ட, உங்கள் வேலையோடு தொடர்பாக உங்களுக்கு ஏற்பட்ட செலவினங்களுக்கான பிடித்தத்தை நீங்கள் கோரிப்பெற இயலும்:

    பணியாளர்கள் (தற்காலிகப் பணியாளர்கள் உள்ளிட்டோர்) அவர்களுக்கு செலவான வேலை தொடர்பான செலவினங்களை அந்த வருமான ஆண்டிலேயே கோரிப்பெறலாம். இதன் பொருள், நீங்கள் ஜூன் மாதத்தில் உங்கள் வேலையை ஆரம்பிக்கிறீர்கள் என்றால், ஜூன் மாதத்தில் உங்களுக்கு செலவான வேலை தொடர்பான செலவுகளுக்கான பிடித்தங்களைக் கோரிப்பெற்றுக் கொள்ளலாம். இதை, உங்களது வேலை வருமானத்தை அடுத்த ஆண்டு வரை பெறவில்லை என்றாலும் கூட பெற்றுக்கொள்ளலாம்.

    உங்களது வேலையில் துணைபுரியும்படி நீங்கள் ஒருவரைப் பணியமர்த்திக் கொள்கிற பட்சத்தில், பொதுவாகவே அந்த ஆளைப் பணியமர்த்தியதற்காக, நீங்கள் பிடித்தத்தைக் கோரிப்பெற முடியாது.

    மற்ற பிடித்தங்கள்

    உங்களால், பின்வருபவற்றுக்கான பிடித்தத்தையும் கோரிப்பெற இயலும்:

    தொழில் மற்றும் தொழில்துறை குறிப்பான வழிகாட்டல்கள்

    எங்களது தொழில் மற்றும் தொழில்துறை குறிப்பான வழிகாட்டல்கள், வருமானம், படிகள் மற்றும் வேலை-தொடர்பான செலவுகளுக்காக நீங்கள் கோரிப்பெறக்கூடிய பிடித்தங்கள் குறித்த தகவல்களை வழங்குகின்றன.

    பார்க்கவும்: உங்கள் பிடித்தங்களை சரியாகப் பெறுங்கள்

    This video shows how to get your deductions right.

    Media: Get your deductions right
    http://tv.ato.gov.au/ato-tv/media?v=bd1bdiubgwof44External Link (Duration: 1:08)

    உங்களது பிடித்தங்களை மேலாண்மை செய்தல்

    நீங்கள் பெரும்பாலான செலவினங்களுக்கான பதிவுகளை பராமரித்து வைக்க வேண்டியிருக்கும். ATO செயலியில் இருக்கும் myDeductions கருவியை உபயோகித்து, ஒரே இடத்தில் உங்களது வேலை தொடர்பானதும், பொதுவானதுமான செலவுகள் குறித்த பதிவுகளை வைத்துப் பராமரித்துக் கொள்ளுங்கள். செல்லுமிடமெல்லாம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு இது ஒரு எளிய வழியாகும், அதோடு இது உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதை விரைவானதாக்குகிறது.

    நீங்கள் பின்வருவனவற்றுக்காக இந்த myDeductions கருவியை உபயோகித்துக் கொள்ளலாம்:

    • உங்கள் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ய
    • உங்கள் myTax வரிக்கணக்கை முன்பே நிரப்பி வைக்க.

    நீங்கள் பதிவு பெற்ற வரி முகவர் ஒருவரை உபயோகிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களோடு உங்களது பதிவுகளின் நகல் ஒன்றை அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்புவதன் மூலம் பகிரலாம், அல்லது அவரக்ளே அவர்களது மென்பொருள் மேலாண்மை மூலமாக, நீங்கள் பதிவேற்றியுள்ள பதிவுகளை அணுகிப் பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த myDeductions பதிவைப் பராமரிக்கும் கருவி, பின்வருவனவற்றுக்காக உங்கள் பதிவுகளை பராமரித்து வைக்க உதவுகிறது:

    • பணி தொடர்பான அனைத்துச் செலவுகள் (கார் பயணங்கள் உட்பட)
    • வட்டி மற்றும் ஆதாயப் பங்குத் தொகைப் பிடித்தங்கள்
    • பரிசுகள் அல்லது அன்பளிப்புகள்
    • வரி விவகாரங்களை மேலாண்மை செய்வதற்கான செலவுகள்
    • தனிப்பட்ட வர்த்தகர் செலவுகள் மற்றும் வியாபார வருமானம்
    • மற்ற பிடித்தங்கள்

    பார்க்கவும்: எவ்விதமாகப் பிடித்தங்களை myTaxஇல் சேர்த்து, மறுஆய்வு செய்வது

    This video shows how easy it is to keep your records using myDeductions.

    Media: How to add and review deductions in myTax
    http://tv.ato.gov.au/ato-tv/media?v=bd1bdiuboi3ynbExternal Link (Duration: 2:53)

      Last modified: 22 Jul 2021QC 66408