Show download pdf controls
  • உங்கள் வரிக் கணக்கை எவ்விதம் தாக்கல் செய்வது

    உங்களால் உங்கள் வரிக்கணக்கை myTax உபயோகித்து இணைய வாயிலாகவோ, பதிவு செய்துள்ள வரி முகவர் வாயிலாகவோ தாக்கல் செய்ய முடியும் அல்லது காகித வடிவில் உள்ள வரிக்கணக்குப் படிவத்தைப் பூர்த்தி செய்து தரலாம். உங்கள் வரிக்கணக்கில் , ஜூலை 1 முதல் ஜூன் 30 முடியவுள்ள வருமான ஆண்டு அடங்குகிறது. நீங்கள் வரிக்கணக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதென்றால், அதை நீங்களாகவோ அல்லது வரி முகவர் ஒருவரை ஈடுபடுத்தியோ 31 அக்டோபர் தேதிக்குள் தாக்கல் செய்தாக வேண்டும்.

    நீங்கள் வரிக்கணக்கொன்றை தாக்கல் செய்யும் போது, நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதையும், எவ்வளவு செலவுகளை நீங்கள் பிடித்தமாகக் கோரிப்பெறலாம் என்பதையும் சேர்க்கிறீர்கள்.

    இந்தப் பக்கத்தில்:

    தாக்கல் செய்வதற்கான வழிவகைகள்

    நீங்கள் வரிக் கணக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதென்றால், உங்களது சூழ்நிலையைப் பொறுத்து பின்வரும் வழிவகைகளில் ஒன்றைத் தெரிவு செய்யலாம்.

    பின்வருபவற்றை எவ்விதம் செய்வது எனத் தெரிந்துகொள்ளுங்கள்:

    கணக்கை தாக்கல் செய்த பிறகு, எமது சுய-சேவை வழிவகையை உபயோகித்து உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்ததை அடுத்து எடுத்துள்ள நடவடிக்கையைப் பாருங்கள்.

    உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதில் உங்களுக்கு உதவி வேண்டுமென்றால், உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான உதவியும், ஆதரவும் என்பதைப் பாருங்கள்.

    வரிக் கணக்கை தாக்கல் செய்ய உங்களுக்குத் தேவையாகும் தகவல்கள்

    நீங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தற்கு முன்பாக, இந்த வரிக் காலத்தில் தனிநபர்களுக்கு புதிய செய்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு, பின்வரும் தகவல்கள் அனைத்தும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் சிபாரிசு செய்கிறோம். உங்களுக்குத் தேவை, உங்களது:

    • வங்கிக் கணக்கு விவரங்கள் (BSB மற்றும் கணக்கு எண்)
    • உங்களுக்கு சம்பளம் தரும் அனைவரிடமிருந்தும் பெறுகிற வருமானக் கணக்கு அறிக்கை அல்லது சம்பளப் பட்டியல்கள்
    • Centrelink (Services Australia)-வில் இருந்து பெற்ற சம்பளப் பட்டியல்கள்
    • பிடித்தங்கள் என நீங்கள் கோருகின்ற செலவுகளுக்கான இரசீதுகள் அல்லது கணக்கு அறிக்கைகள்
    • உங்கள் இல்வாழ்க்கைத் துணையின் வருமானம் (அப்படியொருவர் இருந்தால்)
    • தனியார் சுகாதாரக் காப்பீட்டுத் தகவல்கள் (உங்களுக்குக் காப்பீட்டுப் பாதுகாப்பு இருந்தால்) .

    நீங்கள் myTax-ஐ உபயோகித்து இணைய வாயில வரிக்கணக்கை தாக்கல் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்காக நாங்களே இத்தகவல்களில் பெரும்பாலானவற்றைப் பூர்த்தி செய்து விடுகிறோம். இணைய வாயிலாக தாக்கல் செய்வதற்கு நீங்கள் உங்களது myGov கணக்கை ATO-வுடன் இணைக்க வேண்டியிருக்கும்.

    அடுத்த படி:

    உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான உரிய தேதிகள்

    அதோடு நீங்களே சுயமாக உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், அதை அக்டோபர் 31 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

    அக்டோபர் 31 ஒரு வார இறுதியாக அமைகிற பட்சத்தில், உங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தற்கான தேதி அக்டோபர் 31 ஆம் தேதிக்கு அடுத்த வேலை நாளாக இருக்கும்.

    நீங்கள் பதிவுபெற்ற வரி முகவர் ஒருவரது சேவைகளை உபயோகித்துக் கொள்ளத் தெரிவு செய்கிற பட்சத்தில், அவர்களிடம் கணக்கு தாக்கல் செய்வதற்கான சிறப்பு கால அட்டவணைகள் இருக்கும், அதோடு அவர்கள் தங்களது அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குப் பின்னரும் கூட வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய முடியும். நீங்கள் ஒரு பதிவுபெற்ற வரி முகவரைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள்ளாகவே அமர்த்திக் கொள்ள வேண்டும்.

    உங்கள் வரிக் கடப்பாடுகளை நிவிர்த்தி செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தாலோ அல்லது 31 அக்டோபர் வாக்கில் தாக்கல் செய்ய இயலவில்லை என்றாலோ, கூடிய விரைவில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

    நீங்களே உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்து, அது வரி செலுத்த வேண்டிய நிலையில் அமைகிற பட்சத்தில், நீங்கள்:

    • ஜூலை 1-க்கும், அக்டோபர் 31-க்கும் இடையே தாக்கல் செய்தாலும் கூட, 21 நவம்பருக்குள் அத்தொகையைச் செலுத்தியாக வேண்டும்
    • அக்டோபர் 31-க்குப் பிறகு.

    நீங்கள் உரிய தேதியில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால்

    நீங்கள் உரிய தேதியில் வரிக்கணக்கைத் தாக்கல் செய்யாமல் விட்டாலும் கூட, உங்களால் முடிந்த அளவு கூடிய விரைவில் தாக்கல் செய்வது முக்கியமானதாகும்.

    நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கிற பட்சத்தில், கணக்கு தாக்கல் செய்வதைத் தாமதிக்க வேண்டாம். நீங்களே உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்கிற பட்சத்தில், நீங்கள் தாமதமக வரிக்கணக்கை தாக்கல் செய்தாலும் கூட, வரி செலுத்த வேண்டியதற்கான தேதி நவம்பர் 21 ஆகும். நவம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை எதற்கும் வட்டி பொருந்தும்.

    உரிய நேரத்தில் பணம் செலுத்துவது உங்களுக்கு சிரமமாக இருந்தால், நீங்கள் பணம் செலுத்துவதற்கான திட்டம் ஒன்றைக் கேட்டுப் பெறலாம்:

    • இணைய வாயிலாக, $100,000 அல்லது அதைவிடக் குறைவான கடனுக்கு, உங்களுக்கு ஒரு myGov இருந்து அதை ATO-வுடன் இணைத்திட வேண்டியிருக்கும்.
    • தானியங்கி தொலைபேசி சேவை வாயிலாக, $100,000 அல்லது அதைவிடக் குறைவான கடனுக்கு
    • தொலைபேசி வாயிலாக, $100,000 தொகைக்கு மேலான கடன்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒரு பணம் செலுத்தும் திட்டத்தை அமைக்க நாங்கள் உழைக்க முடியும்.

    இதையும் பாருங்கள்:

      Last modified: 21 Jun 2021QC 66001