நாங்கள் நேர்மையான வியாபாரத்தை எவ்விதம் பாதுகாக்கிறோம்
தொழில் நடத்தும் பெரும்பான்மையானவர்கள் நேர்மையானவர்கள் என்பதும், தொழில் ஒன்றை நடத்துவதென்பது கடினமானது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
துரதிஷ்டவசமாக, சில தொழில் நிறுவனங்கள், அவர்களது வரி செலுத்தும் கடமைகளையும், ஓய்வூதியம் தரும் கடமைகளையும் நிவிர்த்தி செய்யாமல், அநியாயமான அனுகூலங்களை எடுத்துக் கொள்கிறார்கள். நாங்களோ, இத்தகைய கருப்புப் பொருளாதாரச் செயல்பாடுகளை சீர்படுத்துவதன் மூலமாக, நியாயமற்ற போட்டியிலிருந்து, நேர்மையான தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதையே எங்களது குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.
இந்தக் கருப்புப் பொருளாதாரம் என்பது, வரி மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு வெளியே நடக்கிறதும், அவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிற அல்லது துஷ்பிரயோகம் செய்கிற, நேர்மையற்றதும், குற்றவியல் சார்ந்ததுமான செயல்பாடுகளையே குறிக்கிறது. கருப்புப் பொருளாதாரச் செயல்பாடுக்களுக்கான உதாரணங்களில் அடங்குபவை:
- வருமானம் அனைத்தையும் வெளிச்சொல்லாமல் இருப்பது
- பிடித்தங்களை அதிகமாக அறிவிப்பது
- கடமைகளைச் செய்யாமல் விடுவதற்காக கை மேல் பணம் கேட்பது (அல்லது பணம் கொடுப்பது)
- சட்ட விரோதமாக புகையிலை உபயோகித்தல், மோசடி ஒப்பந்தம் செய்தல் மற்றும் ஆஸ்திரேலியா வியாபார எண் (ABN) மோசடி செய்தல் போன்ற மற்ற சட்ட விரோத செயல்பாடுகள்.
நாங்கள் தொழிற்துறைச் சங்கங்கள், வரி விர்ப்பன்னர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களோடு பேசிப் பழகி, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எவற்றையும் புரிந்து கொள்கிறோம். யார் யாரெல்லாம் சரியான காரியத்தைச் செய்யாதிருக்கலாம், அல்லது யார் யாருக்கு இன்னும் அதிக உதவி தேவையாகலாம் என்பதைப் பார்க்க, நாங்கள் அவ்வப்போதைய மூன்றாம் தரப்புத் தரவையும், ஆபத்துப் பகுப்பாய்வையும் உபயோகித்துக் கொள்கிறோம். நாங்கள் வருகை தரும் போது நாங்கள் என்ன காண்கிறோம் என்பதைப் பொருத்து, தொடர்ந்து கண்காணிப்பதற்காக நாங்கள் பின்னொரு தேதியில் தொழில் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
நமது சமுதாயம் நியாயமற்ற பழக்கவழக்கங்களைச் சகித்துக் கொள்வதில்லை. உங்களுக்கு ஏதோவொன்று சரியாக இல்லை என்பது போல் தோன்றினால், அதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் அதை நாங்கள் தொடர்ந்து கவனிப்போம்.
தகவல் அமர்விற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள்
நாங்கள், நேர்மையான தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்க உதவுவதற்காக, நாடெங்கிலும் தகவல் அமர்வுகளையும், தொழில் நிறுவனங்களைச் சென்று பார்த்து வருவதையும் ஏற்பாடு செய்கிறோம்.
தகவல் அமர்விற்குப் பதிவு செய்ய
நாங்கள் தொழில் நிறுவனங்களுக்கு வருகை புரிவது
நாங்கள் வருகை தரும் போது, நாங்கள் பின்வருபவை குறித்தே தொழில் நிறுவனங்களிடத்தில் பேசுகிறோம்:
- பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் பணம் அனுப்பும் வசதிகள், பதிவுகளைச் செய்தல், நிலுவையிலுள்ள இருப்புகள், வரிக் கடன்கள், மற்றும் சூப்பர் பணியமர்த்தும் நிறுவனக் கடப்பாடுகள்
- தவறுகளை எவ்விதம் சரி செய்வது
- மின்னணு வாயிலாக பதிவுகளைப் பராமரித்தல் மற்றும் பணம் அனுப்பும் முறைகளின் பலன்கள்
- அவற்றுக்கு உதவக்கூடிய ATO கருவிகள் மற்றும் கிடைக்கும் தயாரிப்புகள்
- அவர்களுக்குத் தேவைப்படக்கூடிய வேறு ஏதேனும் உதவி.
வருகையின் போது நாங்கள் என்ன காண்கிறோம் என்பதைப் பொருத்து, தொடர்ந்து கண்காணிப்பதற்காக நாங்கள் பின்னொரு தேதியில் தொழில் நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம். அவர்களை நாங்கள் தொலைபேசி அழைப்பின் வாயிலாகவோ, கடிதம் எழுதியோ அல்லது கூடுதலாக ஒருமுறை சென்று வருவதன் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம், அது மறுஆய்வு அல்லது தணிக்கை ஒன்றைச் செய்வதில் போய் முடியலாம்.
ஒரு தொழில் நிறுவனம் வேண்டுமென்றே தவறான காரியம் ஒன்றைச் செய்வது எங்களுக்குத் தெரிந்தால், அது குறித்து ஏதேனும் ஒன்றைச் செய்வதற்கான கடமை எங்களுக்குள்ளது.
நீங்கள் தொழிலில் இருந்து, சரியான காரியத்தைச் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
நீங்கள் தவறொன்றைச் செய்து விட்டீர்கள் என்றால்
நீங்கள் தவறொன்றைச் செய்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து விட்டீர்கள் என்றால். அபராதம் எதையும் குறைக்கலாம், உதாரணமாக நீங்கள்:
- நீங்கள் ரொக்கப் பணப்பட்டுவாடா உள்ளிட்ட, சம்பாதித்திருக்கிற வருமானம் குறித்து எங்களிடம் சொல்லியிருக்கவில்லை
- உங்களுக்கு உரிமையில்லாத பிடித்தங்களைக் கோரிப்பெற்றிருக்கிறீர்கள்
- தவறான அல்லது தவறாக கொண்டு செல்கிற வேறு அறிக்கை எதையும் எங்களிடம் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்களுக்குத் தவறு ஒன்றை சரிசெய்வதற்கு உதவி எங்களிடமிருந்து தேவை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது:
- உங்களது பதிவுபெற்ற வரி அல்லது BAS முகவரைத் தொடர்பு கொள்ளுங்கள்
- எங்களது இலவச மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவையை அழைக்க வேண்டிய எண் 13 14 50.
தொழில் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்
அனைத்துத் தொழில் நிறுவனங்களுமே
- ரொக்கம், ஆன்லைன், EFTPOS மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விற்பனைகள் உள்ளிட்ட, அனைத்து வருமானத்தையும் அறிவிக்க வேண்டும்
- வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்
- GST –க்குப் பதிவு செய்தல், வியாபாரச் செயல்பாட்டு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல் போன்ற, உங்களுக்குப் பொருந்துகிற GST கடப்பாடுகளை நிவிர்த்தி செய்யுங்கள்.
- உங்களிடம் பணியாளர்கள் இருந்தால், அவர்களுக்குக் குறைந்த பட்சம் குறிப்பிட்டுள்ள விகிதத்தில் சம்பளம் மற்றும் அவர்களது ஓய்வூதியத்தைக் கொடுப்பது போன்ற பணியமர்த்துவோர் கடப்பாடுகளை நிவிர்த்தி செய்யுங்கள்
- நல்ல முறையில் பதிவுகளைப் பராமரித்து வாருங்கள் – பதிவேடுகளில் அனைத்து வியாபாரப் பரிவர்த்தனைகளையும் பதிவு செய்து வைக்க வேண்டும், அதை எழுத்துப்பூர்வமாகவும், ஆங்கிலத்திலும் வைத்திருந்து, குறைந்தது ஐந்தாண்டுகளுக்காவது வைத்திருக்க வேண்டும்.
துப்புக் கொடுங்கள்
யாரேனும் ஒருவர் வேண்டுமென்றே தவறான காரியமொன்றைச் செய்து வருவதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் அதை இரகசியமாக எங்களிடம் அறிவிக்கலாம்.
தகவல்களை எங்களால் முழுமையாக அனுமானிக்க முடிகிற வகையில் உங்களால் கூடிய மட்டும் அனைத்து விவரங்களையும் எங்களுக்கு வழங்க முயற்சியுங்கள். எங்களது மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவைகளை இந்த எண்ணில் தொலைபேசியில் அழைத்தும் துப்புக் கொடுக்கலாம் 13 14 50.
இன்னும் அதிகத் தகவல்கள் கிடைக்குமிடம் நேர்மையான தொழில் நிறுவனத்தைப் பாதுகாத்தல்
We protect honest businesses by addressing black economy activities and identify those gaining an unfair advantage by not paying their fair share of tax.