Show download pdf controls
  • உங்களது வரிக்கணக்கைச் சமர்ப்பித்தல்

    நீங்கள் வரிக்கணக்கு ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டதும், நீங்கள், பதிவுபெற்ற வரி முகவர் ஒருவரைக் கொண்டு, காகிதப் படிவத்தைப் பூர்த்தி செய்வது அல்லது ‘டேக்ஸ் ஹெல்ப் புரோக்ராம்’-ல் இருந்து பெறும் உதவி கொண்டு, ‘myTax’ வாயிலாக ஆன்லைனில் உங்கள் வரிக்கணக்கைச் சமர்ப்பிக்கலாம்.

    இந்த வரிக்கணக்கில், ஜூலை 1 முதல் ஜூன் 30 முடியவுள்ள நிதியாண்டு அடங்குகிறது, அதோடு நீங்களே சுயமாக இக்கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், அவற்றை அக்டோபர் 31 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

    MyTax வசதியானது, நீங்களே சுயமாக வரிக்கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான, விரைவானதும், எளிதானதும், பாதுகாப்பானதும், பத்திரமானதுமானதோர் வழியாகும். வரிக் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு உங்களுக்கு ATO உடன் இணைத்துள்ள myGov கணக்கு ஒன்று அவசியமாகிறது.

    நீங்கள் வரிக் கணக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதா?

    பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

    இந்நிதியாண்டின் போது நீங்கள் பெற்றுக் கொண்ட வருமானம் எதிலிருந்தும் உங்களிடமிருந்து வரி பிடித்திருக்கிறார்கள் என்றால், நீங்கள் ஒருசில விதிவிலக்குகளின் கீழ் வந்தால் ஒழிய, ஒருவேளை நீங்கள் ஒரு வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கலாம்.

    நீங்கள் தாக்கல் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், அது குறித்துத் தெரிந்து கொள்ள ஆங்கில மொழியில் கீழே கொடுத்துள்ள எங்களது நான் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா என்ற கணக்கீட்டு மென்பொருளை உபயோகியுங்கள்.

    அடுத்த படிகள்:

    • நான் வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா? (English link)
    • 13 28 61 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள். உங்களது அழைப்பில் உதவி புரிவதற்கு உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவையானால், தயவுசெய்து தொலைபேசி மொழிமாற்றச் சேவை (TIS) வசதியை 13 14 50 என்ற எண்ணில் அழையுங்கள்.

    உங்களது வரிக்கணக்கைத் தாக்கல்

    செய்வதற்கான வழிகள்:

    இதையும் பாருங்கள்:

    குறிப்பு: நீங்கள் வரி செலுத்த வேண்டியுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் உங்களுக்குச் சிரமங்கள் இருந்து வந்தால், கூடுமான மட்டும் 13 28 61என்ற எண்ணில் விரைவில் எங்களைத் தொடர்பு கொள்ளுமாறே உங்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியில் எங்களிடம் பேசுவதற்கு, 13 14 50 என்ற எண்ணில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவை வசதியை அழையுங்கள்.

    நீங்கள் வரிக் கணக்கைப் பதிவு செய்ய வேண்டியதில்லை

    நீங்கள் முன்பே வரிக்கணக்கைத் தாக்கல் செய்திருந்து, இனிமேல் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு நினைவூட்டல்களை அனுப்பிக் கொண்டிருக்காத வகையில் அதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் எங்களை அழைப்பதற்கான வழிவகைகள்:

    நீங்கள் வரிக் கணக்கைப் பதிவு செய்ய வேண்டியதிருந்தால்

    நீங்கள் வரிக் கணக்கைப் பதிவு செய்ய வேண்டியதிருந்தால், myTax தான் வரிக்கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான, விரைவானதும், எளிதானதும், பாதுகாப்பானதும், பத்திரமானதுமானதோர் வழியாகும். பொதுவாகவே உங்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தொகையை நீங்கள் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக் கொள்ள முடியும்.

    ஆன்லைனில் தாக்கல் செய்யுங்கள்

    நீங்கள் எங்களது ஆன்லைன் சேவைகளை உபயோகிப்பதற்கு ATO உடன் இணைத்துள்ள myGov கணக்கு ஒன்று அவசியமாகும்.

     

    கால அளவு நிமி:நொடி. கையெழுத்துப் படிவம் ஒன்றும் கிடைக்கிறது.

    உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான மற்ற வழிகள்.

    உங்களது முதல் வரிக்கணக்கைத் தாக்கல் செய்தல்

    இப்போது தான் நீங்கள் முதன் முறையாக உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், வரி கணக்கைத் தாக்கல் செய்யும் முறையை எளிதாக்கிக் கொள்ள பின்வரும் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.

    உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான மிகவும் எளிதானதும், மிகவும் வேகமானதுமான வழி என்பது வசதியை உபயோகித்து ஆன்லைனில் தாக்கல் செய்வதேயாகும்.

    ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கு உங்களுக்கு ATO உடன் இணைத்துள்ள myGov கணக்கு ஒன்று அவசியமாகும்.

    முதன் முறையாக வரிக்கணக்கைத் தாக்கல் செய்யும் ஒருவராக, உங்களுக்கென பின்பற்ற வேண்டிய சில படிகள் இருக்கின்றன:

    படி 1 உங்களது வரி தாக்கல் கோப்பு எண்ணையும் (TFN) உங்களது பிறப்புச் சான்று, கடவுச்சீட்டு அல்லது குடியுரிமைச் சான்று போன்ற அடையாள ஆவணங்களில் ஒன்றையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

    படி 2 – myGov கணக்கு ஒன்றை உருவாக்குங்கள்.

    படி 3 – எங்களை 13 28 61 என்ற எண்ணில் அழைத்து உங்களது கணக்கைச் சரிபார்ப்பதற்கான தனித்துவமான இணைப்புக் குறியீட்டைப் பெறும் முயற்சியில் 5 என்ற எண்ணை அழுத்துங்கள். ஒவ்வொரு தனித்துவக் குறியீடும் 24 மணி நேரங்களில் காலாவதியாகிவிடும்.

    படி 4 – myGov கணக்கிற்குள் சைன் இன் செய்யுங்கள், ‘சேவைகள்’ பக்கத்திற்குக் சென்று, ATO-உடன் இணையுங்கள். ‘என்னிடம் ஒரு இணைப்புக் குறியீடு உள்ளது’ என்பதைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதில் சொல்கிறபடியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

    எவ்விதம் myGov கணக்கொன்றை உருவாக்கி, அதனை ATO உடன் இணைப்பது என்பது குறித்து கீழுள்ள வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

     

    கால அளவு நிமி:நொடி. கையெழுத்துப் படிவம் ஒன்றும் கிடைக்கிறது.

    படி 5 – நீங்கள் இப்போது ஆன்லைன் சேவைகளை உபயோகித்து, ATO உபயோகிப்பதன் மூலம் உங்களது வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஆரம்பிக்கத் தயாராகி விட்டீர்கள்.

    இப்போதே myGov கணக்கொன்றை ஆரம்பியுங்கள்

    உங்களிடம் ஏற்கெனவே கணக்கொன்று இருந்து, அதன் யூஸர்நேம் அல்லது பாஸ்வேர்டு மறந்து போய் விட்டதென்றால், உங்களால்:

    உதவி தேவையா?

    நாங்கள் ‘டேக்ஸ் ஹெல்ப்’ என்றதோர் இலவசச் சேவையை வழங்குகிறோம், இச்சேவை நீங்கள் உங்களது வரிக்கணக்கைத் தயார் செய்து அதனைத் தாக்கல் செய்ய உங்களுக்கு உதவும்.

    அடுத்த படி:

    இதையும் பாருங்கள்:

    ஆன்லைனில் தாக்கல் செய்யுங்கள்

    MyTax வசதி கொண்டு ஆன்லைனில் உங்களது சொந்த வரிக்கணக்கைத் தயார் செய்து தாக்கல் செய்வது, விரைவானதும், எளிதானதும், பாதுகாப்பானதும், பத்திரமானதுமானதோர் வழியாகும்.

    ஆன்லைனில் தாக்கல் செய்யுங்கள்

    MyTax வசதியானது, வரிக்கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான, விரைவானதும், எளிதானதும், பாதுகாப்பானதும், பத்திரமானதுமானதோர் வழியாகும். இது இணைய அடிப்படையிலானது, ஆகவே நீங்கள் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை அதோடு நீங்கள் உங்களது வரிக்கணக்கைக் கணினி, ஸ்மார்ட்ஃபோன் அல்லது டேப்லெட் போன்ற எந்தக் கருவியிலிருந்தும் தாக்கல் செய்யலாம். எப்படித் தாக்கல் செய்வது என்பதை நேரடியாகப் பார்க்க எங்களது வீடியோவைப் பாருங்கள்.

     

    கால அளவு நிமி:நொடி. கையெழுத்துப் படிவம் ஒன்றும் கிடைக்கிறது.

    myGov கணக்கொன்றைப் பெறுதல்

    myTax வசதியை உபயோகிப்பதற்கு உங்களுக்கு myGov கணக்கொன்று தேவை. எவ்விதம் myGov கணக்கொன்றை உருவாக்கி, அதனை ATO உடன் இணைப்பது என்பது குறித்து கீழுள்ள வீடியோவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

     

    கால அளவு நிமி:நொடி. கையெழுத்துப் படிவம் ஒன்றும் கிடைக்கிறது.

    உங்களிடம் ஏற்கெனவே கணக்கொன்று இருந்து, அதன் யூஸர்நேம் அல்லது பாஸ்வேர்டு உங்களுக்கு மறந்து போய் விட்டதென்றால், உங்களால்:

    இதையும் பாருங்கள்:

    myTax வசதி கொண்டு வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதன் பலன்கள்

    • ஆகஸ்ட் 2016 ஆம் மாதத்திலிருந்து, பணியமர்த்தும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசாங்க முகமைகளிடமிருந்து வருகிற தகவல்களைக் கணினி முன்னதாகவே பூர்த்தி செய்து, நீங்கள் பூர்த்தி செய்யச் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தி விடுகிறது.
    • உங்களது தகவல்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றன என்பதைப் பார்த்துக் கொள்வதற்கு நாங்கள் பல்வேறு விதமான அமைப்புகளையும், கட்டுப்பாடுகளையும் உபயோகிக்கிறோம் - இது ஆன்லைன் பேங்கிங் வசதி போன்றே பாதுகாப்பானதாகும்.
    • நீங்கள் உங்களது வசதிக்கேற்ப கணக்கத் தாக்கல் செய்ய முடிகிற வகையில் இது 24/7 செயல்படக்கூடியது.
    • உங்களது பணத்தை நீங்கள் விரைவாகவே திரும்பப் பெற்றுக் கொள்கிறீர்கள் - பொதுவாக இரண்டு வாரங்களுக்குள்.
    • இப்போது, தனிப்பட்ட வர்த்தகர்கள் உட்பட, தாங்களே சொந்தமாக தங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய விரும்புகிறவர்கள் அனைவருக்கும் இவ்வசதி கிடைக்கிறது (2016 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து).

    புதிய அம்சங்கள்

    MyTax வசதியில் இன்னும் அதிகமானவற்றைச் செய்ய முடிகிற வகையில் அதனை மேம்படுத்தியிருக்கிறோம், அதோடு அது தனிப்பட்ட வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கிடைக்கிறது.

    2016 ஆம் ஆண்டில் செய்த மேம்பாடுகளிலும், அதன் அம்சங்களிலும் அடங்குபவை:

    • myDeductions உங்களது வரிக்கணக்கில் தானாகவே தரவுகள் சேர்ந்து கொள்கின்றன (தனிப்பட்ட வர்த்தகர்கள் நீங்கலாக)
    • மதிப்புக்குறைப்பு மற்றும் மூலதன ஆதாயங்களைப் பதிவு செய்வதற்கான புதிய ஆன்லைன் வசதிகள்
    • முந்தைய ஆண்டு வரிக்கணக்கைப் பதிவு செய்ய அல்லது அதில் திருத்தம் செய்வதற்கான திறன்
    • முழுமையாக ஒருங்கிணைத்த வசதிகள் மற்றும் கால்குலேட்டர்கள்
    • நீங்கள் வரிக்கணக்கைப் பதிவு செய்வதில் உங்களை வழிகாட்டுவதற்கு உதவி புரிகிற செய்திகள்
    • myTax வசதிக்குப் புதியவர்
      • வியாபார மற்றும் தொழில்நிபுணர்கள் உருப்படிகள் (BPI)
      • வாடகைச் சொத்துப் பட்டியல்கள்
      • மூலதன ஆதாயங்கள் வரி
       

    இதையும் பாருங்கள்:

    உங்களது ஆன்லைன் வரிக் கணக்கை முன்பே பூர்த்தி செய்தல்

    முன்பே பூர்த்தி செய்தல் என்பதில், உங்களது வரிக்கணக்கில் பாதியளவை, உங்களது myTax வரிக்கணக்கு வசதிக்குள் தகவல்களை தானாகவே ஏற்றிவிடுவதன் மூலம், உங்களுக்காக நாங்களே பூர்த்தி செய்து விடுகிறோம்:

    • பணியமர்த்தும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசாங்க முகமைகள் போன்ற எங்களிடம் அறிக்கையளிக்கிற நிறுவனங்களிடமிருந்து கிடைத்துள்ள தற்போதைய ஆண்டுத் தகவல்கள்
    • உங்களது கணக்குச் செயல்பாட்டிலிருந்தும், முந்தைய ஆண்டு தாக்கல் செய்த வரிக் கணக்கிலிருந்தும் எங்களிடமுள்ள தரவுகள்.

    நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நாங்கள் முன்னமே நிரப்பியுள்ள உங்களது தகவல்களைச் சரிபார்த்து விட்டு, விடுபட்ட விவரங்கள் எதையும் சேர்ப்பது அல்லது சரியல்லாத தகவல்களை சரியாக்குவதுமேயாகும்.

    படிவத்தை முன்னமே நிரப்புவது என்பது, வரிக்கணக்கு தாக்கல் செய்வதை எளிதானதாகவும், மிகத் துல்லியமானதாகவும் ஆக்குவதற்குமேயாகும்.

    முன்னமே நிரப்புகிற தகவல்கள் வழக்கமாகவே மற்ற நிறுவனங்கள் எங்களிடம் அறிவிக்கிற இரண்டொரு நாட்களுக்குள் கிடைத்து விடுகின்றன. பெரும்பாலான தகவல்கள் சாதாரணமாக ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலேயே கிடைத்து விடுகின்றன.

    முன்னமே நிரப்பிய தகவல்கள் தவறானதாக இருந்தால் என்ன செய்வது?

    முன்னமே நிரப்பிய தகவல்கள் தவறாக இருக்கின்றன என நீங்கள் நினைக்கிற பட்சத்தில், அவற்றை உங்களது சொந்தப் பதிவேடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து விட்டு, உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, இருக்கிற முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு, அத்தரவை எங்களுக்குக் கொடுத்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

    உங்களிடம் மிகச் சமீபத்திய தகவல்கள் இருக்கிற பட்சத்தில், நீங்கள் உங்களது முன்னமே நிரப்பியுள்ள உங்களது தகவல்களைத் திருத்தவோ அல்லது அழிக்கவோ செய்யலாம்.

    உங்களது வரிக்கணக்கில், நீங்கள் முன்னமே நிரப்பிய தகவல்களைத் திருத்துகிறீர்கள் என்றால், உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக, இருக்கிற முரண்பாடுகள் எதையும் அத்தரவை எங்களுக்குக் கொடுத்த நிறுவனத்திடம் தீர்த்துக் கொள்வது முக்கியமானதாகும். இது ஏனென்றால், நிறுவனங்கள் எங்களிடம் கொடுத்திருக்கிற தகவல்கள், உங்களது வரிக்கணக்கில் உள்ள தகவல்களுக்குப் பொருந்துகின்றன என்பதை நாங்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

    காகிதப் படிவத்தில் வரிக்கணக்கைத் தாக்கல் செய்யுங்கள்

    நீங்கள் காகிதப் படிவத்தில் பூர்த்தி செய்துள்ள வரிக்கணக்கை அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பதற்கு, காகிதப் படிவத்தில் உள்ள தனிநபர்களுக்கான வரிக்கணக்குப் படிவம் என்ற படிவத்தையும் தனிநபர்களுக்கான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அறிவுறுத்தல்கள் என்ற படிவத்தையும் தாக்கல் செய்யலாம். பெரும்பாலான வரிக்கணக்குகளில் திருப்பித் தரவேண்டிய தொகைகளை, தாக்கல் செய்த 50 வேலை நாட்களுக்குள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம்.

    உங்களது தொகையை – பொதுவாக இரண்டு வாரங்களுக்குள் - விரைவில் திரும்பப் பெறுவதற்கு – இந்த ஆண்டு நீங்கள் ஏன் ஆன்லைனில் உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்யக் கூடாது?

    காகிதப் படிவத்தில் எவ்விதம் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வது

    காகிதப் படிவத்தில் எவ்விதம் வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு:

    நீங்கள், அறிவுறுத்தல்களையும், வரிக்கணக்கைத் தாக்கல் செய்யும் இரண்டு காகிதப் படிவ நகல்களையும் கொண்டுள்ளதோர் தொகுப்பு வேண்டுமெனச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்:

    • இதனை ஆன்லைனில் எங்களது publication ordering service (English link) வாயிலாக வாங்கலாம்
    • அல்லது 13 28 61, என்ற எண்ணில், காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை (ஆஸ்திரேலிய கிழக்கத்திய நியமன நேரம்), திங்கள் முதல் வெள்ளி வரை, தொலைபேசியில் பேசி வாங்கலாம். ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியில் எங்களிடம் பேசுவதற்கு, 13 14 50 என்ற எண்ணில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவை வசதியை அழையுங்கள்.

    உங்களுக்கு வியாபாரம் ஒன்றிலிருந்து அல்லது மூலதன ஆதாயங்களில் இருந்து, அல்லது அயல்நாட்டு மூலாதார வருமானத்திலிருந்து அல்லது வாடகை வருமானத்திலிருந்து வருமானம் வருகிறதென்றால், நீங்கள் தனிநபர்கள் வரி தாக்கல் செய்வதற்கான காகிதப் படிவத்திற்குக் கூடுதலாக, தனிநபர்கள் வரி தாக்கல் செய்வதற்கான காகிதப் படிவம் (பின்னிணைப்புப் பகுதியிலும்) வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கலாம்.

    வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அறிவுறுத்தல்கள் (பின்னிணைப்பு) ஆன்லைனில் மட்டுமே கிடைக்கிறது. நீங்கள், உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கான படிவம் வேண்டுமெனச் சொல்லி வாங்கும் அதே நேரத்திலேயே நீங்கள் இப்பின்னிணைப்புப் பகுதி வேண்டுமெனவும் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.

    உங்களது வரிக்கணக்கை எங்கு அனுப்புவது

    பூர்த்தி செய்த உங்களது வரிக்கணக்கை அனுப்ப வேண்டிய முகவரி:
    Australian Taxation Office
    GPO Box 9845
    IN YOUR CAPITAL CITY

    குறிப்பு: IN YOUR CAPITAL CITY என்ற வார்த்தைகளை உங்களது தலைநகரம் மற்றும் தபால் குறியீட்டைக் கொண்டு மாற்றாதீர்கள்.

    இதையும் பாருங்கள்:

    பதிவுபெற்ற வரி முகவர் ஒருவரைக் கொண்டு வரிக்கணக்கைத் தாக்கல் செய்யுங்கள்

    உங்களுக்காக, உங்ளது வரிக்கணக்கைத் தயார் செய்து தாக்கல் செய்வதற்கு நீங்கள் பதிவுபெற்ற வரி முகவர் ஒருவரை உபயோகித்துக் கொள்ளலாம். உங்களது வரிக்கணக்கைத் தயார் செய்து தாக்கல் செய்வற்குக் கட்டணம் விதிக்க அனுமதி பெற்றுள்ள ஒரே ஆட்கள் என்பவர்கள், பதிவு பெற்ற வரி முகவர்களேயாவர்.

    பெரும்பாலான பதிவு பெற்ற வரி முகவர்கள் பிரத்தியேகமான வரி தாக்கல் செய்யும் கால அட்டவணைகளை வைத்திருக்கிறார்கள் ஆகவே அவர்கள் வழக்கமான அக்டோபர் 31 என்ற காலக்கெடுவிற்குப் பிறகும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.

    நீங்கள் கீழுள்ள, ‘டேக்ஸ் பிராக்டிஷனர்ஸ் போர்டு’ இணையதள இணைப்பில், பதிவு பெற்ற வரி முகவர் ஒருவரைக் கண்டுகொள்ளவோ அல்லது ஒரு நபர் பதிவு பெற்ற வரி முகவர் தானா என்பதைத் தெரிந்து கொள்ளவோ முடியும்.

    அடுத்த படி:

    இதையும் பாருங்கள்:

    டேக்ஸ் ஹெல்ப் புரோக்ராம்

    உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதில் உங்களுக்கு உதவி தேவையென்றால், நீங்கள் ‘டேக்ஸ் ஹெல்ப் புரோக்ராம்’ ஒன்றுக்குத் தகுதியடையலாம்.

    ‘டேக்ஸ் ஹெல்ப்’ என்பது, ATO-பயிற்சி பெற்றவர்களையும், சான்று பெற்ற சமுதாயத் தன்னார்வலர்களையும் கொண்டதோர் கூட்டமைப்பு ஆகும், இவர்கள் myTax வசதியை உபயோகித்து ஆன்லைனில் மக்கள் தங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு உதவுவதற்காக, இலவசமானதும், இரகசியமானதுமானதோர் சேவையை வழங்குகிறார்கள்.  

    ‘டேக்ஸ் ஹெல்ப்’ வசதி கிடைப்பது:

    • அனைத்துத் தலைநகரங்களிலும், ஆஸ்திரேலியா எங்கிலும் உள்ள அநேகப் பிராந்தியப் பகுதிகள்
    • ஜூலை முதல் அக்டோபர் வரை.

    நான் ‘டேக்ஸ் ஹெல்ப்’ வசதிக்குத் தகுதியடைகிறேனா?

    இந்த வருமான ஆண்டிற்கான உங்களது வருமானம் கிட்டத்தட்ட $50,000 தொகை அளவிற்கு இருந்து அல்லது இதைவிடக் குறைவாக இருந்து, நீங்கள் பின்வரும் வேலைகளைச் செய்யவில்லை என்றால், நீங்கள் 2015-16 ஆம் ஆண்டில் டேக்ஸ் ஹெல்ப் வசதிக்குத் தகுதியடைகிறீர்கள்:

    • ஒரு ஒப்பந்ததாரராக வேலை செய்யவில்லை, உதாரணமாக ஒரு ஒப்பந்த கிளீனர் அல்லது டேக்ஸி டிரைவர்
    • ஒரு வியாபாரத்தை நடத்தவில்லை, இதில் தனிப்பட்ட வர்த்தகர் என்பது உட்பட
    • உங்களுக்கு வர்த்தகக்கூட்டு அல்லது அறக்கட்டளை விஷயங்கள் இல்லை
    • நீங்கள் பங்குகளை அல்லது முதலீட்டுச் சொத்தை விற்கவில்லை
    • உங்களிடம் வாடகைக்கு விடும் சொத்து சொந்தமாக இல்லை
    • உங்களுக்கு மூலதன ஆதாயங்கள் வரி (CGT) இல்லை
    • ராயல்டி பெறவில்லை
    • மேலாண்மை செய்கிற நிதி தவிர, அறக்கட்டளை ஒன்றிலிருந்து வினியோகித்தவற்றைப் பெறவில்லை
    • அயல்நாட்டு ஓய்வூதியம் அல்லது பணிக்கொடை தவிர்த்து, அயல்நாட்டு வருமானத்தைப் பெறவில்லை.

    தன்னார்வலர்கள் எனக்கு எதில் உதவ முடியும்?

    தன்னார்வலர்கள் உங்களுக்கு, myTax வசதி கொண்டு வரிக்கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்வதில் அல்லது வரி வரவுகளைத் திருப்பிப் பெறுவதில் உதவ முடியும்.

    நீங்கள் வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்பதாக எங்களது தன்னார்வலர்கள் கணக்கிடுகிற பட்சத்தில், அவர்கள் 'வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை' அறிவிப்பு ஒன்றைப் பூர்த்தி செய்து கொடுக்க உங்களுக்கு உதவலாம்.

    தன்னார்வலர்களால், திருத்தங்களைச் செய்வதில் உங்களுக்கு உதவ இயலாது.

    வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய நேரம் குறியுங்கள்

    நீங்கள் ‘டேக்ஸ் ஹெல்ப்’ வசதிக்குத் தகுயடைகிறீர்கள் என்றால், உங்களுக்கு ATO உடன் இணைத்த myGov கணக்கு (English link) தேவை. அவசியமானால், எங்களது தன்னார்வலர்களால் உங்களது myGov கணக்கை ATO உடன் இணைக்க உதவ முடியும்.

    இதற்கு நேரம் குறித்துக் கொள்ள நீங்கள் தயாரானதும், உங்களுக்கு மிக அருகில் உள்ள ‘டேக்ஸ் ஹெல்ப்’ மையத்தைத் தெரிந்து கொள்வதற்கு எங்களை 13 28 61 என்ற எண்ணில் எங்களை அழையுங்கள். உங்களது அழைப்பில் உதவி புரிவதற்கு உங்களுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவையானால், தயவுசெய்து தொலைபேசி மொழிமாற்றச் சேவை (TIS) வசதியை 13 14 50 என்ற எண்ணில் அழைத்து, உங்களுக்குத் தேவையாகிற ATO எண்ணை அவர்களிடம் கொடுங்கள்.

    பின்வருவனவற்றை உங்களுக்குக் குறித்துக் கொடுத்துள்ள நேரத்தில் உங்களோடு கொண்டுவர ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்:

    • உங்களது myGov யூஸர் ID மற்றும் பாஸ்வேர்டு
    • உங்களது வங்கிக் கணக்கு விவரங்கள் (BSB மற்றும் கணக்கு எண்)
    • உங்களது வரிக் கோப்பு எண்
    • சென்ற ஐந்து ஆண்டுகள் எதேனும் ஒன்றிலிருந்து எடுத்த அசல் அல்லது திருத்திய மதிப்பீட்டு அறிவிப்பு (அந்த மதிப்பிட்டை இந்த ஆண்டு மே 31 ஆம் தேதிக்கு முன்பாக கொடுத்திருக்க வேண்டும்)
    • அனைத்து மூலங்களிலுமிருந்து பெறுகிற வருமான அறிக்கைகள்
    • பரிசுகள், அன்பளிப்புகள் மற்றும் பணி-தொடர்பான செலவுகளுக்கான உங்களது இரசீதுகள் அனைத்தும்
    • குழந்தைப் பராமரிப்பு எதற்கும் கொடுத்த தொகைகள் குறித்த விவரங்கள்
    • பங்குகளில் அல்லது வாடகைக்கு விடும் சொத்துக்களில் ஏற்பட்ட இழப்புகள் எதுவும் குறித்த விவரங்கள் (நிகர முதலீட்டு இழப்புகள்).
    • இந்நிதியாண்டின் போது எந்த நேரத்திலும் உங்களுக்கு வாழ்க்கைத் துணை ஒருவர் இருந்திருந்தால் (திருமணம் செய்தவர் அல்லது தார்மீக அடிப்படையில், நீங்கள் அவர்களது வரி செலுத்தக்கூடிய வருமானத்தின் விவரங்களை அல்லது நியாயமானதோர் கணக்கீட்டையும் கொடுக்க வேண்டியிருக்கிறது.

    இதையும் பாருங்கள்:

    டேக்ஸ் ஹெல்ப் தன்னார்வலர் ஒருவராக ஆகுங்கள்

    டேக்ஸ் ஹெல்ப் திட்டத்திற்கு உங்களால் தன்னார்வப் பணி புரிய இயலலாம். ஆங்கிலத்தில் இன்னும் அதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ள, வருகை தாருங்கள் டேக்ஸ் ஹெல்ப் தன்னார்வலர் ஒருவராக ஆகுங்கள் (English link).

    நீங்கள் தாக்கல் செய்துள்ளதன் மீது எடுத்துள்ள நடவடிக்கையைத் தெரிந்து கொள்ளுதல் அல்லது தவறு ஒன்றைச் சரி செய்தல்

    உங்களது வரிக்கணக்கை நீங்கள் தாக்கல் செய்து விட்டதும், நாங்கள் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றைக் கொடுப்போம். இம்மதிப்பீட்டு அறிக்கை, நீங்கள் தொகை எதையும் திரும்பப் பெற உரிமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா அல்லது நீங்கள் கூடுதல் வரி எதையும் செலுத்த வேண்டியுள்ளதா என்பதை உங்களுக்குச் சொல்லி விடுகிறது.

    உங்களிடம் ATO உடன் இணைந்த myGov கணக்கொன்று இருக்கிறதென்றால், உங்களது மதிப்பீட்டு அறிக்கையை myGov இன்பாக்ஸிற்கு அனுப்பி வைத்து விடுவோம். அது எப்போது அங்கு செல்கிறது என்பதைச் சொல்கிறதோர் மின்னஞ்சல் அல்லது ஒரு SMS உங்களுக்கு வரும்.

    எனக்கு எனது திருப்பித் தரும் தொகை எப்போது கிடைக்கும்?

    மின்னணு வரிக்கணக்குத் தாக்கல்கள் மீது சாதாரணமாக 2 வாரங்களில் நடவடிக்கை எடுத்து விடுகிறோம் காகிதப் படிவத்தில் செய்த வரிக்கணக்கு தாக்கல்கள் மீது ஆட்கள் கொண்டே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது, இதற்கு சாதாரணமாக 10 வாரங்கள் ஆகின்றது. நீங்கள் எங்களைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னாலும் கூட, இந்த நடைமுறையை வேகப்படுத்துவதற்கு வேறு வழியேதும் இல்லை. எந்த நேரத்திலும் myGov வசதி மூலமாக எங்களது ஆன்லைன் சேவைகளுக்குள் லாக் இன் செய்து பார்ப்பதன் மூலம், உங்களது வரிக்கணக்குத் தாக்கல் மீது எடுக்கும் நடவடிக்கையை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

    உங்களது வரிக் கணக்கு தாக்கலில் நீங்கள் செல்லுபடியாகிறதோர் ஆஸ்திரேலிய வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கியுள்ளீர்கள் என்றால், உங்களுக்குத் திருப்பித் தரும் தொகையை நேரடியாக உங்களது வங்கிக் கணக்கிலேயே வரவு வைத்து விடுவோம்.

    உங்களுக்குத் திருப்பித் தரும் தொகை கிடைக்காமல் தாமதமாகிறதென்றால், அதற்கு அநேகக் காரணங்கள் இருக்கலாம். அப்படித் தாமதமாவதற்கான மிகவும் பொதுவான காரணங்களில் சில:

    • முந்தைய ஆண்டிற்கான வரிக்கணக்குகளை, தனியாகவோ அல்லது நடப்பு ஆண்டின் வரிக்கணக்கோடு சேர்த்தோ, நீங்கள் சமீபத்தில் தான் தாக்கல் செய்திருக்கிறீர்கள்
    • நீங்கள் தற்போது எங்களுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி இருக்கிறது
    • நாங்கள் Centrelink அல்லது Child Support போன்ற மற்ற ஆஸ்திரேலிய அரசு முகமைகளில் நீங்கள் கொடுத்துள்ள தகவல்களைச் சரிபார்க்க வேண்டியுள்ளது.

    உங்களது கணக்கிற்குள் லாக் இன் செய்து பார்ப்பதன் மூலம் அல்லது ATO app ஐ பதிவிறக்கம் செய்வதன் மூலம் நீங்கள் தாக்கல் செய்துள்ள உங்களது வரிக்கணக்கில் எடுத்துள்ள நடவடிக்கையைத் தெரிந்து கொள்ளலாம் (English link).

    எனது வரிக்கணக்கில் நான் எவ்விதம் திருத்தம் செய்வது அல்லது இருக்கிற தவறு ஒன்றைச் சரி செய்வது?

    நீங்கள் தவறு ஒன்றைச் செய்து விட்டீர்கள் என்பதாகவோ அல்லது ஏதோவொன்றைச் சேர்க்க மறந்து விட்டீர்கள் என்பதாகவோ நினைக்கிற பட்சத்தில், நீங்கள் உங்களது myGov கணக்கை உபயோகித்து எங்களது ஆன்லைன் சேவைகளை அணுகுவதன் மூலம் உங்களது வரிக்கணக்கைத் திருத்த முடியும்.

    நீங்கள் 2016 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளின் வரிக்கணக்குகளை - myTax, e-tax, வரி முகவர், அல்லது காகிதப் படிவம் என - எப்படித் தாக்கல் செய்துள்ளீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அவற்றுக்கான ஆன்லைன் திருத்தம் ஒன்றைச் செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்க முடியும்.

    நீங்கள் myTax மூலம் தாக்கல் செய்தீர்கள் என்றால், நீங்கள் நேரடியாகவே உங்கள் வரிக்கணக்கில் திருத்தம் செய்து விடலாம் அல்லது தவறுகளைச் சரி செய்து விடலாம்.

    பதிவு பெற்ற வரி முகவர் ஒருவரைக் கொண்டு நீங்கள் தாக்கல் செய்தீர்கள் என்றால், அவர்களால் உங்களது வரிக்கணக்கில் திருத்தம் செய்ய முடியும்.
    காகிதப் படிவத்தில் வேண்டிக் கொள்கிற திருத்தங்கள் மீது நடவடிக்கை எடுக்க 50 வேலை நாட்கள் ஆவதோடு ஒப்பிடுகையில், ஆன்லைன் திருத்தங்கள் மீது பொதுவாகவே 20 வேலை நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து விடுகிறோம். அவசியமானால் நீங்கள் பல முறை திருத்தம் செய்து கொள்ளலாம்.

    அடுத்த படிகள்:

    முந்தைய ஆண்டு வருமானவரிக் கணக்குகள்

    நீங்கள் முந்தைய ஆண்டு ஒன்றுக்கான வரிக்கணக்கை இன்னமும் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் இருந்தால், அபராதம் விதிக்கப் பெறுவதற்கான ஆபத்தைக் குறைப்பதற்கு, கூடிய விரைவில் நாளது தேதி வரையில் கணக்கைச் சமர்ப்பித்து விடுவது முக்கியமானதாகும்.

    உங்களது முந்தைய ஆண்டு வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு உங்களுக்கு மூன்று வழிவகைகள் இருக்கின்றன:

    நீங்கள் வரி செலுத்த வேண்டியுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கு சிரமங்கள் இருந்து கொண்டிருந்தால், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை (ஆஸ்திரேலிய கிழக்கத்திய நியம நேரம்) 13 28 61 என்ற எண்ணில் தொலைபேசியில் அழைப்பதன் மூலம் கூடிய விரைவில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ஆங்கிலம் தவிர இன்னொரு மொழியில் எங்களிடம் பேச விரும்பினால், நீங்கள் உங்களது அழைப்பில் உதவுவதற்கு 13 14 50 என்ற எண்ணில் மொழிபெயர்ப்பு மற்றும் மொழிமாற்றச் சேவை வசதியை அழைக்கலாம்.

    நீங்கள் ஆங்கிலத்தில் தனிநபர்களுக்கான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யும் அறிவுறுத்தல்கள் (சமீபத்திய ஆண்டுகள்) என்பதற்கான அறிவுறுத்தல்களையும் அணுகிப் பயன் பெறலாம்.

      Last modified: 03 Aug 2016QC 49791