Show download pdf controls
  • நீங்கள் பராமரித்து வைக்க வேண்டிய பதிவுகள்

    நீங்கள் உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்ததிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு (பெரும்பாலான நிலைகளில்) உங்கள் பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும். அப்பதிவுகளில், வருமானக் கணக்கு அறிக்கைகள், பணப்பட்டுவாடா சுருக்கங்கள் மற்றும் இரசீதுகள் அடங்கலாம். உங்களுக்கு, வருமான ஆண்டின் போது உங்களது வருமான வரிக் கணக்கை கணக்கிடுவதற்குத் தேவையான முக்கிய ஆவணங்களை வந்து சேரும்.

    இத்தகவல்களின் சுருக்கம் ஒன்றை சுவரொட்டி வடிவில் பெற, பாருங்கள் நீங்கள் பராமரித்து வைக்க வேண்டிய பதிவுகள் - பதிவுகளை சரி செய்யுங்கள் (PDF, 894KB)This link will download a file.

    இந்தப் பக்கத்தில்:

    பதிவுகளைப் பராமரித்து வைப்பதன் முக்கியத்துவம்

    நல்ல பதிவுகளைப் பராமரித்து வைப்பது உங்களுக்கும், உங்களது வரி ஆலோசருக்கும் உதவுகிறது:

    • உங்கள் வருமானம் மற்றும் செலவுகள் குறித்த எழுத்துப்பூர்வமான அத்தாட்சியை வழங்குவதற்கு
    • உங்களது வரிக்கணக்கை தயார் செய்யுங்கள்
    • உங்களது உரிமைகள் அனைத்தையும் நீங்கள் கோரிப்பெற்று விடுகிறீர்கள் என்பதை உறுதி செய்யுங்கள்
    • உங்கள் வருமான வரிக்கணக்கில் நீங்கள் வழங்கியுள்ள தகவல்களை நிரூபியுங்கள் (நாங்கள் கேட்கும் பட்சத்தில்)
    • வரித் தணிக்கைகள் மற்றும் சரிக்கட்டுதல்களைச் செய்வதற்கான ஆபத்தைக் குறைத்திடுங்கள்
    • எங்களோடு கொள்ளும் தகவல் தொடர்பை மேம்படுத்துங்கள்
    • உங்களது மதிப்பீடுகள் அல்லது சரிக்கட்டுதல்கள் குறித்ததோர் தகராறு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்திடுங்கள்
    • அபராதங்கள் விதிக்கப்பெற ஆளாகாதீர்கள்.

    நல்ல பதிவுகளைப் பராமரித்து வைப்பது உங்களது வரிப் பிரச்சினைகளை மேலாண்மை செய்வதற்காகும் செலவுகளைக் குறைக்கிறது. நீங்கள் வரி ஆலோசகர் ஒருவரை உபயோகித்துக் கொள்கிறீர்கள் என்றால், உங்களது பதிவுகளை வரிசையாக அடுக்கி, தயார் செய்வதற்கு அவர்கள் செலவிடும் நேரத்தை உங்களால் குறைத்திட முடியும். இது, நீங்கள் உங்களது உரிமைகளைக் கோரிப்பெற்றுவிடுகிறீர்கள் என்பதைப் பார்த்துகொள்ள அவர்களுக்கு அதிக நேரத்தைக் கொடுத்திடும்.

    இதையும் பாருங்கள்:

    உங்கள் பதிவுகளை எவ்வளவு காலம் பராமரித்து வைப்பது

    பொதுவாக, நீங்கள் உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்ததிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் எழுத்துப் பூர்வமான அத்தாட்சிகளை வைத்திருந்தாக வேண்டும்.

    இதில் இன்னும் சில குறிப்பான சூழ்நிலைகளும் உள்ளன. பின்வரும் நிலையில்:

    • நீங்கள், மதிப்புக் குறையும் சொத்துக்களின் மதிப்பில் குறைவு ஏற்பட்டதற்காக கழிப்பு ஒன்றைக் கோருகிறீர்கள் என்றால் – கடைசியாக மதிப்புக் குறைந்ததற்காக நீங்கள் கோரிக்கை விடுத்த தேதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பதிவுகளைப் பராமரித்து வைத்திடுங்கள்
    • நீங்கள், ஒரு சொத்தை வாங்குகிறீர்கள் அல்லது விற்று விடுகிறீர்கள் – உங்களுக்கு உறுதியாக மூலதன ஆதாயங்கள் வரி (CGT) நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிந்த பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் பதிவுகளைப் பராமரித்து வையுங்கள்.
    • நீங்கள் எங்களோடு தகராறில் இருக்கிறீர்கள் – இவற்றில் எதற்குப் பின்னும் பதிவுகளைப் பராமரித்து வையுங்கள்    
      • உங்களது வரிக்கணக்கைத் தாக்கல் செய்ததிலிருந்து ஐந்து ஆண்டுகள்
      • தகராறைத் தீர்த்ததிலிருந்து ஐந்து ஆண்டுகள்.
       

    உங்கள் பதிவுகளின் அமைவு வடிவம்

    உங்களது பதிவுகளை நீங்கள் காகிதம் அல்லது மின்னணு வடிவில் பராமரித்து வைத்திடலாம். நீங்கள் காகிதம் அல்லது மின்னணு நகல்களைப் பராமரித்து வருகிறீர்கள் என்றால், அவை அசலானவையாகவும், அசலின் தெளிவான நகல்களாகவும் இருந்திடல் வேண்டும்.

    உங்களது மின்னணுப் பதிவுகள் அனைத்தையும் ஒரு பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ளும்படியே நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.

    உங்களது செலவுகள் அவுஸ்திரேலியாவிற்கு வெளியே ஏற்பட்டிருந்தால் ஒழிய, உங்கள் ஆவணங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தாக வேண்டும்.

    வரிக்கழிவு ஒன்றை நீங்கள் கோருகிற பட்சத்தில், உங்களது கோரிக்கைகளை நீங்கள் எவ்விதம் கணக்கிடுகிறீர்கள் என்பதற்கான பதிவுகளை நீங்கள் காண்பித்தாக வேண்டும். பதிவுகள் என்பவை, வழக்கமாகவே சரக்குகள் அல்லது சேவைகளை வழங்குபவரிடமிருந்து பெறும் ஒரு இரசீதேயாகும். ஒரு இரசீதில் காணப்பட வேண்டியவை:

    • வழங்குபவரின் பெயர்:
    • செலவுத் தொகை
    • சரக்குகள் அல்லது சேவைகளின் தன்மை
    • அச்செலவினத்திற்குப் பணம் கொடுத்த தேதி
    • ஆவணத்தேதி.

    நீங்கள் பராமரித்து வைக்க வேண்டிய பதிவுகளுக்கான உதாரணங்கள்

    நீங்கள் பராமரித்து வைக்க வேண்டிய பதிவுகளுக்கான உதாரணங்களில் அடங்குபவை:

    • உங்களுக்கு சம்பளம் தருபவரிடமிருந்தும், Services Australia-இடமிருந்தும் பெறுகிற வருமானக் கணக்கு அறிக்கை அல்லது சம்பளப் பட்டியல்கள்
    • அவ்வருமான ஆண்டின் போது நீங்கள் சம்பாதித்த வட்டியைக் காண்பித்து, உங்களது வங்கி மற்றும் மற்ற நிதி நிறுவனங்களிலிருந்து பெறுகிற கணக்கு அறிக்கைகள்
    • ஆதாயப்பங்கு அறிக்கைகள்
    • நிர்வகித்து வருகிற முதலீட்டு நிதிகளிலிருந்து பெறுகிற சுருக்க அறிக்கைகள்
    • சாதனம் அல்லது சொத்துக் கொள்முதல்கள் அல்லது விற்பனைகளுக்கான இரசீதுகள் அல்லது விலைப்பட்டியல்கள்
    • செலவுக் கோரிக்கைகள் அல்லது பழுது நீக்கல்களுக்கான இரசீதுகள் அல்லது விலைப்பட்டியல்கள்
    • ஒப்பந்தங்கள்
    • வாடகைதாரர் மற்றும் வாடகைப் பதிவுகள்.

    வேலை தொடர்பான செலவுகளுக்கான உங்களது மொத்தக் கோரிக்கைத் தொகை, $300 டாலருக்கு மேல் இருந்தால், உங்களது கோரிக்கைகளை நிரூபிப்பதற்கான எழுத்துப்பூர்வ அத்தாட்சி உங்களிடம் இருந்தாக வேண்டும்.

    நீங்கள் மூலதனச் சொத்து ஒன்றைக் கையகப்படுத்துகிறீர்கள் என்றால் – முதலீட்டுச் சொத்து, பங்குகள் அல்லது நிர்வகித்து வருகிற நிதி முதலீடு போன்றதொன்று – உடனடியாகப் பதிவுகளைப் பராமரித்து வைக்க ஆரம்பித்திடுங்கள், ஏனென்றால், எதிர்காலத்தில் அந்தச் சொத்தை விற்றால் நீங்கள் முதலீட்டு ஆதாயங்கள் வரியைச் செலுத்த வேண்டியதாகலாம். ஆரம்பத்திலிருந்தே பதிவுகளைப் பராமரித்து வைப்பது, அவசியமாவதை விட அதிக வரியை நீங்கள் செலுத்தி விடாமல் இருப்பதைப் பார்த்துக்கொள்ளும்.

    மடிக்கணினி போன்று, வேலைக்காக நீங்கள் உபயோகித்திருக்கிற மதிப்புக் குறைந்து வரும் சொத்து ஒன்றின் விலையை நீங்கள் கோருகிறீர்கள் என்றால், இறுதிக் கோரிக்கையைத் தொடர்ந்து வருகிற ஐந்து ஆன்டுகளுக்கு நீங்கள் பதிவுகளைப் பராமரித்து வைத்தாக வேண்டும், அவற்றில் அடங்குபவை இவற்றில் ஏதேனுமொன்று:

    • கொள்முதல் இரசீது மற்றும் மதிப்புக்குறைவு திட்டம்
    • மதிப்பில் குறைவு ஏற்பட்டுள்ளதற்கான உங்களது கோரிக்கையை நீங்கள் எவ்விதம் கணக்கிட்டீர்கள் என்பது குறித்த விவரங்கள்.

    அந்த ஐந்து ஆண்டுகளின் போது இருக்கிற உங்களது பதிவுகளைக் காண்பிக்குமாறு நாங்கள் உங்களிடம் கேட்கலாம், உங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக போதுமான அத்தாட்சி உங்களிடம் இருப்பது முக்கியமானதாகும்.

    இதையும் பாருங்கள்:

    myDeductions பதிவு பராமரித்து வைக்கும் வசதி

    நீங்கள் பராமரித்து வைக்கிற பதிவுகள் காகித வடிவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. myDeductions என்பது, உங்களது பதிவுகளை நீங்கள் மின்னணு ரீதியாகப் பார்த்து வைத்துக் கொள்வதை எளிதாக்குகிறதோர் பதிவு-பராமரிக்கும் வசதியாகும்.

    நீங்கள் மின்னணு ரீதியாக ஆவணங்களாக உங்கள் பதிவுகளை இருப்பு வைப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், இதில் உங்களது இரசீதுகளின் புகைப்படங்களும் அடங்குகின்றன.

    எளிமையான காரியங்களைக் கொண்டுள்ள தனிப்பட்ட வியாபாரிகளும் கூட இதை, அவர்களது வியாபார வருமானம் மற்றும் செலவுகளைப் பதிவுசெய்து வைக்க உதவ உபயோகித்திடலாம்.

    உங்களால் உங்களது பதிவுகளை myDeductions வசதியிலிருந்து பதிவேற்றம் செய்து, உங்களது myTax கணக்கை முன்னமே பூர்த்தி செய்திடவும் முடியும். நீங்கள் பதிவுபெற்ற வரி முகவர் ஒருவரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களால் உங்களது பதிவுகளை நேரடியாக அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும் முடியும்.

    இந்த myDeductions வசதி, ஒரு வருமான ஆண்டின் போது உங்களது பதிவுகளை பின்வருவனவற்றுக்காக ஒரே இடத்தில் பராமரித்து வைக்க வழி செய்து தருகிறது:

    • பணி தொடர்பான அனைத்துச் செலவுகள் (கார் பயணங்கள் உட்பட)
    • வட்டி மற்றும் ஆதாயப் பங்குத் தொகைப் பிடித்தங்கள்
    • பரிசுகள் அல்லது அன்பளிப்புகள்
    • வரி விவகாரங்களை மேலாண்மை செய்வதற்கான செலவுகள்
    • தனிப்பட்ட வர்த்தகர் செலவுகள் மற்றும் வியாபார வருமானம்
    • மற்ற பிடித்தங்கள்

    Watch: A quick demonstration of myDeductions

     

    இதையும் பாருங்கள்:

    பதிவு பராமரித்து வைப்பதில் விதிவிலக்குகள்

    பதிவு பராமரித்து வைப்பதில் விதிவிலக்குகள் காரியங்களை எளிதாக்குவதற்காகக் கிடைக்கின்றன – அவை தானியங்கிப் பிடித்தம் ஒன்றைக் கோரிப்பெற உங்களுக்கு வழிசெய்வதில்லை.

    சில சூழல்களில், உங்களுக்கு இரசீதுகள் தேவையாகாமல் போகலாம், ஆனாலும், அப்போதும் உங்களால் நீங்கள் பணத்தைச் செலவழித்தீர்கள் என்பதைக் காண்பிக்கவும், உங்களது கோரிக்கையை எவ்விதம் கணக்கீட்டீர்கள் என்பதைக் காண்பிக்கவும் இயலவேண்டியிருக்கும்.

    பொருள் வழங்கும் ஒருவரிடமிருந்து உங்களால் இரசீது ஒன்றைப் பெற இயலவில்லை என்றால், அந்த அத்தாட்சியின் தன்மையும், தரமும் நீங்கள் பணம் செலவழித்தீர்கள் என்பதாகக் காண்பிக்கின்றன என்றும், நீங்கள் கழிப்பு ஒன்றைக் கோரிப்பெறுவதற்கு உரிமையானவர் என்றும் எங்களுக்குத் திருப்தியாகிற பட்சத்தில், அப்போதும் உங்களால் ஒரு கழிப்பைக் கோரிப்பெற முடியும். உங்களது செலவினங்களுக்கான அத்தாட்சிகளில், அந்தத் தொகையை செலுத்தினீர்கள் என்பதையும், எப்போது அதை யாருக்குச் செலுத்தினீர்கள் என்பதையும் காண்பிக்கிற வங்கி அல்லது கடன் அட்டை கணக்கு அறிக்கை, அதே போல வழங்கியுள்ள சரக்குகள் அல்லது சேவைகளின் தன்மையை அடிக்கோடிட்டுக் காண்பிக்கிற மற்ற ஆவணங்கள் அடங்கலாம்.

    பொருள் வழங்கிய ஒருவருக்கு நீங்கள் ரொக்கத் தொகை செலுத்தி, உங்களிடம் கோரிக்கைக்கு துணையாக வேறு எந்த ஆவணமும் இல்லாத பட்சத்தில், வரிக் கழிப்பு ஒன்றைக் கோருவதற்கு உங்களிடம் போதுமான அத்தாட்சி இருக்காது.

    தொலைந்துபோன அல்லது அழிந்துபோன பதிவுகள்

    உங்களது பதிவுகள் விபத்தாக தொலைந்து போனாலோ அல்லது அழிந்து போனாலோ, உதாரணமாக, திருட்டு அல்லது பேரழிவு ஒன்றின் போது, ஒருசில செலவுகளுக்கான வரிக்கழிப்பை உங்களால் கோரிப்பெற இயலலாம். உங்கள் இவற்றில் எதையாவது பெற முடியும்:

    • தொலைந்துபோன அல்லது அழிந்துபோன பதிவுகலின் முழு நகலையும் தருவது
    • அந்த இழப்பு அல்லது அழிப்பைத் தடுப்பதற்கு நீங்கள் நியாயமான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தீர்கள் என்று அல்லது அப்பதிவுகளின் நகலைப் பெறுவது நியாயமான அளவிற்கு சாத்தியமில்லை என்று எங்களைத் திருப்திப்படுத்துகிறீர்கள்.

    இதையும் பாருங்கள்:

      Last modified: 23 Jul 2021QC 66476