Show download pdf controls
  • வரி செலுத்துவோர் சாசனம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

    ஆஸ்திரேலியாவில் வரிசெலுத்துவோர் சாசனம்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது குறித்த பிரதி ஒன்றினை நீங்கள் தரவிறக்க்கம் செய்யலாம் (PDF, 768KB)This link will download a file

    ஏன் நாம் வரிப்பணம் செலுத்துகிறோம்

    ஆஸ்திரேலிய அரசாங்கம் சேவைகளை வழங்குவதற்காக மக்களும், வியாபார நிலையங்களும் செலுத்தும் பணம் வரியாகும், இதில் பின்வருவன அடங்கும்:

    • சுகாதாரம்
    • கல்வி
    • பாதுகாப்பு
    • சாலைகள் மற்றும் ரயில்வே
    • Centrelink -Services Australia (சென்டர்லின்க் - சேவைகள் ஆஸ்திரேலியா) சமூக பாதுகாப்பு மற்றும் ஏனைய பணக்கொடுப்பனவுகள்.

    வரிப்பண வசூலிப்பினூடாக ஆதரவளிக்கப்படுகின்ற சிறந்த சுகாதார அமைப்பு, தரமான கல்வி மற்றும் பல்வேறுபட்ட சமூக வசதிகளை (உதாரணமாக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள்) ஆஸ்திரேலியர் என்றவகையில் நாம் பெற்று அனுபவிக்கின்றோம்.

    எவ்வளவு வரிப்பணத்தை நீங்கள் செலுத்துவீர்கள்

    நீங்கள் செலுத்தும் வரியின் தொகை பின்வருவனவற்றில் தங்கியுள்ளது:

    • வரி நோக்கங்களுக்காக நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய குடியிருப்பாளரா என்பது.
    • எவ்வளவு வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்
    • உங்களுக்கு ஒன்றைவிட அதிக வேலை இருக்கிறதா என்பது
    • உங்களிடம் tax file number (TFN) (வரிக் கோப்பு எண்) இருக்கிறதா என்பது- இது தங்களுக்குரிய தொடர்பு இலக்கம் ஆகும்; இதை நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் தொழில் தருநருக்குச் சொல்லவேண்டும்.

    ஒரு TFN ஐப் பெற முன்னர் நீங்கள் வேலையை ஆரம்பித்தால், அதைப்பெற்று உங்கள் தொழில் தருநருக்குக் கொடுப்பதற்கு உங்களுக்கு 28 நாட்கள் உண்டு. அவ்வாறு செய்யத் தவறினால், கூடுதலான விகிதத்தில் சம்பளப்பணத்திலிருந்து வரிப்பணத்தை உங்கள் தொழில் தருநர் கட்டாயம் எடுக்கவேண்டும்.

    அத்துடன் பார்க்கவும்:

    நீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்க முன்னர்

    ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கான அனுமதி

    நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரானால், ஆஸ்திரேலியாவில் வேலையை ஆரம்பிக்க முன்னர் Department of Home Affairs லிருந்து கட்டாயமாக அனுமதியை நீங்கள் பெறவேண்டும். ஆஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு உங்களை எந்த விசா அனுமதிக்கும் என்பது அடங்கலாக பயனுள்ள தகவல்களை Home Affairs உங்களுக்கு வழங்கும்.

    அடுத்த படிமுறை:

    • மேலதிக விபரங்களுக்கு, Home AffairsExternal Link ஐத் தொடர்பு கொள்ளவும் (வெளிவாரி இணையத்துடன் தொடர்புகளுக்கு)

    வரிக் கோப்பு எண் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளல்

    TFN (வரிக் கோப்பு எண்) தங்களுக்குரிய தனிப்பட்ட தொடர்பு எண் ஆகும்; இதை நீங்கள் வேலை செய்ய ஆரம்பித்ததும் தொழில் தருநருக்குச் சொல்லவேண்டும். ஒரு TFN ஐ இலவசமாக எடுக்கலாம்

    வேலையை நீங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர், அல்லது வேலை தொடங்கியதும் உடனடியாகப் TFN ஐ நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லையானால் நீங்கள் அதிக வரிப்பணம் செலுத்துவீர்கள். அடையாளம் காண்பதற்கும், பதிவுசெய்து வைத்திருக்கும் நோக்கங்களுக்காகவும், வரிக் கோப்பு எண்களை (TFNs) தனிநபர்கள், வியாபார நிலையங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு நாங்கள் விநியோகிக்கிறோம்.

    எவ்வாறு நீங்கள் உங்களது TFN க்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பது உங்கள் நிலவரங்களைப் பொறுத்ததாகும்.

    எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டுமென்பது குறித்து மேலும் அறிந்துகொள்ள , நீங்கள் போகவேண்டியது:

    நீங்கள் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறினால், அல்லது ஆஸ்திரேலியாவில் நீங்கள் வேலைசெய்ய அனுமதிக்கும் தற்காலிக வதிவிட விசா ஒன்றினை வைத்திருந்தால், நேரடியாக 'ஒன் லைன்' இல் TFN க்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

    நேரடியாக 'ஒன் லைன்' இல் விண்ணப்பிக்க, நீங்கள் போகவேண்டியது:

    உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது, உங்கள் அடையாளத்தை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் உங்களுக்குத் தேவைப்படும்.

    உங்கள் TFN விண்ணப்ப நடைமுறைகளை மேற்கொண்டு உங்களது TFN ஐ உங்கள் விலாசத்துக்கு அனுப்பிவைக்க 28 நாட்கள் வரை எடுக்ககும்.

    உங்கள் TFN ஐப் பாதுகாப்பாக வைத்திருத்தல்

    உங்களது TFN ஆனது உங்கள் வாழ்நாள் முழுவதுக்குமாகும், எனவே அதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். உங்கள் பெயர்,முகவரி, அல்லது வேலைகளை மாற்றினாலும், வேறு மாநிலங்களுக்குச் சென்றாலும், அல்லது வெளிநாடு சென்றாலும் அதே TFN ஐ நீங்கள் வைத்திருக்கலாம்.

    உங்கள் TFN ஐ வேறு எந்த நபரையாவது, நண்பர்கள் அல்லது உறவினர்களானாலும் பாவிக்க அனுமதிக்க வேண்டாம். வேறு ஒருவரைப் பாவிக்க அனுமதித்தல், கைவிடல் அல்லது அதை விற்பனை செய்தல் குற்றமாகும்.

    உங்கள் TFN ஐக் கொடுக்கக்கூடியவர்:

    • உங்களது வரி பதிவுகள் குறித்துக் கலந்துரையாடும்போது எங்களிடம் கொடுங்கள்
    • நீங்கள் வேலையை ஆரம்பித்த பின்னர், உங்கள் தொழில் தருநர், ஆனால் வேலைக்கான விண்ணப்பங்களில் கொடுக்கவேண்டாம்.
    • உங்களது வங்கி அல்லது வேறு நிதி நிறுவனங்கள்
    • Services Australia
    • உங்களது பதிவுசெய்யப்பட்ட வரி முகவர்
    • உங்களது வயது முதிர்வு ஓய்வூதிய சூப்பர்) நிதியம்
    • உயர் கல்விக் கடன் திட்டம் (HELP) போன்ற மாணவர் கடன் உதவியைப்பெற உங்கள் உயர் கல்வி வழங்குநர் அல்லது பல்கலைக்கழகம்.

    உங்களது TFN இழப்பு, களவு அல்லது பிழையான பாவனை குறித்து தொலைபேசிமூலம் 1800 467 033 உடனடியாக எமக்கு அறிவிக்கவும்.

    உங்களது TFN மற்றும் தனிப்பட்ட அடையாள தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அடையாள மோசடிக் குற்றத்தைத் தடுக்க உதவும். குற்றச்செயலைப் புரிவதற்கு ஆட்களுடைய அடையாள விபரங்கள் பாவிக்கப்படும்போது அடையாளக் குற்றம் இடம்பெறுகிறது.

    ஏமாற்றும் மின் அஞ்சல்கள், தொலை நகல்கள், குறும்செய்திகள் (SMS) மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் உண்மையானவைபோல் தோற்றமளித்து மிகவும் நம்பவைக்கும். மின் அஞ்சல்கள் அல்லது SMS களில் உங்கள் TFN, கடவுச்சொற்கள் (passwords) அல்லது வேறு நுண்ணிய தகவல்களை சேர்த்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் விழிப்புடன் இருங்கள் மற்றும் எம்மிடமிருந்து ஓர் அழைப்பு வந்ததாவென நிச்சயமாகத் தெரியாதிருந்தால், எமது மோசடி தொடர்பு எண் (hotline) 1800 008 540 ஐ தொலைபேசியில் அழையுங்கள்.

    அத்துடன் பார்க்கவும்:

    ஆஸ்திரேலிய வியாபார இலக்கங்கள் இருப்பது (ABN) வியாபாரத்திற்காகும்

    ஆஸ்திரேலிய வியாபார இலக்கத்திற்கு (ABN) ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் தகமை கொண்டவர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவில் வேலைசெய்வதற்கு அது அவர்களுக்குத் தேவையில்லை. நீங்கள் ஒரு ABN வைத்திருப்பதால் கருதப்படுவது:

    • நீங்கள் நடாத்துவது உங்கள் சொந்த தொழில்.
    • நீங்கள் உங்களது சொந்த வரிப்பணத்தை எங்களுக்குச் செலுத்த வேண்டும்.
    • உங்கள் சொந்த "சூப்பர்" க்காகப் பணம் செலுத்த வேண்டி வரலாம்.
    • நீங்கள் காயமடைந்தால் காப்புறுதி இல்லாமல் போகலாம்.

    அத்துடன் பார்க்கவும்:

    நீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்கும்போது

    வரிக் கோப்பு எண் அறிவிப்பு பிரகடனத்தைப்பூர்த்திசெய்யவும்

    நீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்கும்போது, உங்களது TFN மற்றும் தனிப்பட்ட தகவல்களை அவர்களுக்குச் சொல்லுவதற்காக உங்கள் தொழில் தருநர் ஒரு Tax file number declaration (NAT 3092) (வரிக் கோப்பு எண் அறிவிப்பு பிரகடனத்தை)ப் பூர்த்திசெய்யுமாறு உ ங்களைக் கேட்பார் (NAT 3092).

    நீங்கள் எவ்வளவு வரிப்பணத்தைச் செலுத்தவேண்டுமென கணக்கிட அவர்கள் இந்தப் பிரகடனத்தைஉபயோகிப்பார்கள்.

    ஒரு TFN ஐப் பெற முன்னர் நீங்கள் வேலையை ஆரம்பித்தால், அதைப்பெற்று உங்கள் தொழில் தருநருக்குக் கொடுப்பதற்கு உங்களுக்கு 28 நாட்கள் உண்டு. அவ்வாறு செய்யத் தவறினால், கூடுதலான விகிதத்தில் சம்பளப்பணத்திலிருந்து வரிப்பணத்தை உங்கள் தொழில் தருநர் கட்டாயம் எடுக்கவேண்டும்.

    வயது முதிர்வு ஓய்வூதியம் (சூப்பர்)

    சூப்பர் என்பது ஆஸ்திரேலியாவினுடைய பணி ஓய்வுக்கான சேமிப்பு ஒழுங்குமுறை. அது, உங்களது ஓய்வு காலத்திற்கு வழங்குவதற்காக நீங்கள் வேலைசெய்த காலத்தில் ஒதுக்கிவைக்கப்பட்ட பணமாகும்.

    ஒரு புதிய வேலையை ஆரம்பிக்கும்போது, எவ்வாறு சூப்பர் இயங்குகிறது மற்றும் உங்களது உரிமைகள், தகைமைகளை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமாகும். இப்போதும், எதிர்காலத்திலும் நீங்கள் எடுக்கும் முடிவுகள், நீங்கள் ஒய்வு பெறும்போது உங்கள் வாழ்க்கை முறையைப் பாதிக்கும்.

    உங்கள் சம்பளத்துக்குக் கூடுதலாக தொழில் தருநர் கட்டாயமாக 'சூப்பர்’ பங்களிப்புப் பணத்தைச் செலுத்தவேண்டும். பெரும்பாலான மக்கள் இதற்கான பங்களிப்புகள் செலுத்தப்படும் ஆஸ்திரேலிய 'சூப்பர்’ நிதியத்தைத் தெரிவுசெய்யலாம்

    பொதுவாக, ஒரு காலண்டர் மாதத்தில் $450 அல்லது அதற்கும் மேலாக உங்களுக்குச் செலுத்தபடுமானால், நீங்கள் சம்பாதிப்பதன் குறிப்பிட்ட ஒரு சதவிகிதத்தை உங்களது தொழில் தருநர் உங்களது 'சூப்பர்’ கணக்குக்குக் கொடுக்கவேண்டும்.

    அத்துடன் பார்க்கவும்:

    வரி விவர அறிக்கை (tax return) ஒன்றினைச் சமர்ப்பித்தல்

    நீங்கள் ஒரு தனி நபர் என்ற வகையில், கட்டாயம் ஒரு வரி விவர அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும், எவ்வாறெனில்:

    • இந்த வரி ஆண்டின்பொழுது நீங்கள் வரி செலுத்தியிருந்தால் (1 யூலை இலிருந்து 30 யூன் வரை)
    • உங்களது வரியிடத்தக்க வருமானம் (Centrelink இடம் இருந்து பெற்ற தொகை அல்லது பணக்கொடுப்பனவுகள் உட்பட) குடியிருப்பாளர்களுக்கான சில வரம்புகளுக்கு மேல் இருந்தால் - பாருங்கள் - நீங்கள் ஒரு வரி விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமா
    • நீங்கள் ஒரு வெளி நாட்டு வதிவாளர் மற்றும் ஆஸ்திரேலியாவில் வரி ஆண்டின்போது $1 அல்லது அதற்கும் மேலாகச் சம்பாதிக்கிறீர்கள் ("குடியிருக்காதவருக்கு நிறுத்தி வைக்கப்பட்ட வரி" பிடிக்கப்பட்ட வருமானம் விலக்கலாக)
    • நீங்கள் ஆஸ்திரேலியாவைவிட்டு நிரந்தரமாக அல்லது ஒரு வரி ஆண்டுக்கும் மேலான காலத்திற்கு வெளியேறுகிறீர்கள்

    சமர்ப்பிப்பதற்கு உங்களுக்குத் தேவைப்படும் தகவல்கள்

    ஒரு வரி விவர அறிக்கையை சமர்ப்பிக்கும்போது, நீங்கள் அறிய வேண்டியது:

    • வேலையிலிருந்து, வங்கிக்கணக்கில் வந்த வட்டியிலிருந்து அல்லது முதலீட்டிலிருந்து எவ்வளவு வருமானத்தை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள்
    • உங்கள் வருமானத்திலிருந்து எவ்வளவு வரிப்பணம் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறது (உங்கள் சம்பளப் பணத்திலிருந்து எவ்வளவு பணம் உங்கள் தொழில்தருநரால் எடுக்கப்பட்டு எமக்கு அனுப்பப்பட்டது)
    • நீங்கள் கோரக்கூடிய கழிவுகள் மற்றும் வரியை ஈடு செய்யும் தொகை.

    உங்கள் வரியைக் குறைப்பதற்கு நீங்கள் கோரக்கூடிய கழிவுகள் செலவுகளாகும். அநேகமான கழிவுகள் வேலை தொடர்பான செலவுகளாகும். உங்கள் வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு உதவும்முகமாக நீங்கள் ஏதேனும் ஒன்றில் செலவுசெய்த பணம் அதுவாகும். உங்கள் செலவுகள் குறித்து நீங்கள் பின்வருவனவற்றைக் காண்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்:

    • வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு நேரடிதொடர்புள்ள செலவுகள் இவை
    • உங்கள் தனிப்பட்டசெலவுகள் அல்ல
    • உங்கள் செலவுகளை நிரூபிக்க உங்களிடம் ஒரு பதிவு இருக்கிறது ( பற்றுச்சீட்டு போன்றவை)

    உங்களது தொழில்தருநர் ஒரு வருமான அறிக்கை அல்லது கொடுப்பனவின் தொகுப்பினை உங்களுக்குத் தரவேண்டும். இது எவ்வளவு பணத்தை நீங்கள் சம்பாதித்தீர்கள் மற்றும் எவ்வளவு பணத்தை நீங்கள் வரியாகச் செலுத்தினீர்கள் என்பதைக் காட்டும்.

    அடுத்த படிமுறைகள்

    பதிவுகளை வைத்திருத்தல்

    உங்கள் வரி விவர அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, நீங்கள் சரியான வரித்தொகையைச் செலுத்தியிருக்கிறீர்களாவென நடைமுறைகளுக்கேற்ப நாம் கணக்குப்பார்ப்போம் ஒரு வரி விதிப்பு அறிவித்தலை உங்களுக்கு அனுப்புவதன் மூலம் அதன் முடிவினை நாம் உங்களுக்கு அறியத்தருவோம்.

    நீங்கள் கோரும் கழிவுகளுக்கு, பற்றுச்சீட்டுகள் போன்ற ஒரு பதிவுச்சான்றினை நீங்கள் வைத்திருக்க வேண்டும். வரி விவர அறிக்கையை நீங்கள் தாக்கல் செய்த திகதியிலிருந்து ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு இத்தகைய பதிவுச்சான்றுகளை நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பதிவுச் சான்றுகளை எமக்குக் காண்பிக்கும்படி நாம் உங்களைக் கேட்கக்கூடும்.

    ஒரே இடத்தில் உங்கள் செலவு மற்றும் வரவுக்கான பதிவுகளை வைத்திருப்பதற்கு ஒரு வசதியான வழி 'my Deductions' ஆகும். உங்கள் smart கருவிக்கு ATO app ஐத் தரவிறக்கம் செய்து myDeduction சின்னத்தைத்தெரிவுசெய்யவும்.

    அதையும் பார்க்கவும்:

    உங்கள் வரி விவர அறிக்கையைப் பூர்த்திசெய்து, சமர்ப்பிக்கவும்.

    சமர்ப்பிப்பது எப்போது

    உங்கள் சொந்த வரி விவர அறிக்கையை நீங்களே தயாரித்து, சமர்ப்பிப்பதானால், அக்டோபர் 31 க்குள் நீங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். முதல் தடவையாக ஒரு வரி முகவரை அல்லது கடந்த ஆண்டைவிட வேறொரு முகவரை நீங்கள் உபயோகிப்பதானால், அக்டோபர் 31 க்குள் அவர்களை நீங்கள் கட்டாயமாகத் தொடர்பு கொள்ளவேண்டும்.

    உங்களது வரி விவர அறிக்கையை நீங்கள் சமர்ப்பிக்காது அத்துடன் நீங்கள் எமக்குக் கொடுக்கவேண்டிய ஏதேனும் ஒரு தொகையைக் செலுத்தாவிட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

    myTax ஐப் பாவித்து 'ஒன்லைன்' இல் சமர்ப்பிக்கவும்

    myTax ஐப் பாவித்து நீங்கள் 'ஒன்லைன்' இல் உங்கள் வரி விபர அறிக்கையைச் சமர்ப்பிக்கலாம். 'ஒன்லைன்' இல் சமர்ப்பிப்பதுதான் விரைவான, சுலபமான, பாதுகாப்பும் உறுதியுமான வழியாகும்.

    myTax ஐப் பாவிப்பதற்கு, நீங்கள் முதலில் myGov கணக்கு ஒன்றினை உருவாக்கி உங்கள் கணக்கை ATO 'ஒன்லைன்' சேவைகளுக்கு இணைக்க வேண்டும்.

    அடுத்த படிமுறை:

    ஒரு பதிவுசெய்யப்பட்ட வரி முகவரைப் பாவித்துச் சமர்ப்பிக்கவும்

    உங்களது வரி விவர அறிக்கையைத் தயாரித்து, தாக்கல்செய்ய ஒரு பதிவுசெய்யப்பட்ட வரி முகவரை நீங்கள் உபயோகிக்கலாம். அக்டோபர் 31 க்கு முன்னர் அவர்களை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும். பதிவுசெய்யப்பட்ட ஒரு வரி முகவரைக் கண்டறிய, அல்லது அவர்கள் பதிவுபெற்ற வரி முகவராவென நீங்கள்சரிபார்க்க முடியும்.

    அடுத்த படிமுறை:

    சமர்ப்பிக்க மேலதிக உதவி

    உங்கள் வரி விவர அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு உங்களுக்கு உதவி தேவைப்படின், Tax Help திட்டத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

    Tax Help என்பது ATO வால் பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ தொண்டர்களின் குழு. myTax ஐப் பாவித்து 'ஒன்லைன்' மூலம் தமது வரி விவர அறிக்கையை மக்கள் பூர்த்திசெய்ய உதவுவதற்காக ஒர் இலவச, நம்பிக்கைக்குரிய சேவையை அவர்கள் வழங்குகிறார்கள்.

    ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள எல்லா தலை நகரங்கள் மற்றும் பல பிராந்திய பிரதேசங்களில் ஜூலை யிலிருந்து அக்டோபர் வரை அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

    அடுத்த படிமுறை:

      Last modified: 22 Sep 2020QC 63668