வரி செலுத்துவோர் சாசனம் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
முன்னுரை
ஓஸ்ரேலிய வரி மற்றும் மூப்பு ஓய்வளிப்பு முறைகள், ஓஸ்ரேலியாவில்.
நாம் அனுபவிக்கும் வாழ்க்கைக்கு ஆதரவு கொடுக்கும் சமூக சொத்துகள் ஆகும் அனைவருக்கும் அவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் பங்கெடுக்க வாய்ப்பு உண்டு.
Australian Taxation Office (ATO), மூப்பு ஓய்வு அளிக்கும் முறைகளில் ஆகியவற்றில் விருப்ப பங்கு பெறுவதன் மூலம் ஓஸ்ரேலியர்களின் பொருளாதார மற்றும் சமூக நல்வாழ்விற்கு பங்களிப்பு செய்கிறது.
ஓஸ்ரேலியர்கள் சட்டத்தின் கீழ் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் தங்கள் பங்கை ஆற்றுகின்றனர்.
உங்களுடனான எங்கள் உறவு பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அடிப்படையிலானது.: இந்த உறவை வளர்க்க:
உங்களுக்கு சரியான நேரத்தில் துறைமையான, மரியாதையுடன் கூடிய சேவையை வழங்குவோம்.
- நீங்கள் மிகவும் நல்லமுறையிலும் மரியாதையுடனும் நடத்தப்படுவீர்கள்
- உங்கள் சூழ்நிலை மற்றும் நீங்கள் உடன்பட்ட நடத்தை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் ஈடுபடுவோம்
- நீங்கள் பெறவேண்டிய விஷயங்களைப் பெற முடிந்தவரை அதை எளிமையாக்குவோம்
- இந்த அமைப்புகளில் பங்கேற்க விரும்புவர்களுக்கான ஆதரவினை வழங்குதல்
- உங்களுடனும் மற்றும் சமூகத்துடன் பழகும்போது, வெளிப்படையாகவும், பொறுப்புடனும் இருப்பது
- மிகச் சிறந்த மற்றும் திறமையான வழியில் நமது சேவைகளை வழங்குதல்.
வரி செலுத்துவோர் சாசனம் உங்கள் உரிமைகளை கோடிட்டுக்காட்டுகிறது. உங்கள் வரி மற்றும் வயது முதிர்வு ஓய்வினை நிர்வகிப்பதற்கு எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என்பதை விளக்குகிறது. உங்களுடனான எங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் அதைப் பின்பற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அறிமுகம்
உங்களுடனோ அல்லது நீங்கள் தெரிவு செய்த பிரதிநிதியிடமோ நாங்கள் நடந்துகொள்வதற்கான வழியைக் சாசனம் குறிப்பிடுகிறது.
எங்களுடன் வரி செலுத்துதல், வயது முதிர்வு ஓய்வு, கலால் வரி மற்றும் பிற சட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசுகிற அனைவருக்கும் இது உரித்தானது.
அதை நீங்கள் புரிந்து கொள்ள உதவும்:
- உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள்
- நீங்கள் எங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்
- உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் என்ன செய்ய முடியும்.
உங்களையும் நீங்கள் பரிந்துரைத்த பிரதிநிதிகளையும் நாங்கள் 'நீங்கள்' மற்றும் 'உங்களுடைய' என்பதன் மூலம் குறிப்பிடுகிறோம்.
‘அனைவருக்கும்' என்பது 'எங்களை' மற்றும் 'உங்களை' குறிக்கிறது.
உங்கள் உரிமைகள்
நீங்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்:
உங்களை மிகவும் நியாயமாகவும் மற்றும் நேர்மையாகவும் நடத்தப்படுதல்
நாங்கள் செய்வோம்:
- உங்களை பணிவன்புடனும், கவனத்துடனும், மரியாதையுடனும் நடத்துவோம்
- நேர்மையுடனும் நியாயத்துடனும் நடந்து கொள்வோம்
- பாரபட்சம் காட்டாமல் நடந்துகொள்ளல்
- ஓஸ்ரேலிய சமூகத்தின் பன்முகத்தன்மையை உணர்ந்து மரியாதை அளிப்போம் சட்டத்திற்கு இணங்க நியாயமான மற்றும் நேர்மையான முடிவுகளை எடுங்கள்
- உங்கள் கவலைகள், பிரச்சினைகள் அல்லது புகார்களை மிகவும் சீக்கிரமாக முடிந்தவரை விரைவாக தீர்க்கலாம்
- நியாயமான மற்றும் சமமான முடிவுகளை எடுக்கலாம்
- சட்டம் அனுமதிக்கும் வரை உங்கள் தரப்பு நியாயங்களை கேட்கவும், உங்கள் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளலாம்.
மேலும் பார்க்க
நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ளுதல்
நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்கள் முழுமையாகவும் சரியாகவும் இருப்பின் ஏற்றுக்கொள்கிறோம்.
பொதுவாக, நீங்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், நாங்கள் உங்கள் வரி பொறுப்புகளை மதிப்பீடு செய்கிறோம்.
சில நேரங்களில் ஏற்படுகின்ற தவறுகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். நீங்கள் செய்யும் தவறுகள் மற்றும் திட்டமிட்ட செயல்கள் இடையே உள்ள வித்தியாசங்களை தெரிவிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றோம் உங்கள் விளக்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்வோம்.
நாங்கள் நிர்வகிக்கும் சட்டங்களுக்கு நீங்கள் அனைவரும் இணங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுதல் உங்கள் தகவலை மதிப்பாய்வு செய்வது, நீங்கள் நேர்மையற்றதாக கருதுவது அல்ல. ஆனால் ஏதேனும்முரண்பாடுகளை கண்டால், நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும் பார்க்க
உங்களுக்கு தொழில்முறை சேவை மற்றும் உதவி வழங்குதல்
நீங்கள் எங்களுடன் ஒரு உற்பத்தித்திறன் மிகுந்த மற்றும் தொழில்முறை பணி உறவை எதிர்பார்க்கலாம்:
- உங்கள் உரிமைகள் மற்றும் உரிமங்களைப் புரிந்து கொள்ள உதவுவோம்
- நாங்கள் அறிமுகப்படுத்தும்போது எங்கள் பெயர்களை உங்களுக்கு வழங்குகிறோம், சில சூழ்நிலைகளில் நாம் மற்றொரு வடிவத்திலான இன்னொரு அடையாளத்தை வழங்கி, உங்களுக்கு தனிப்பட்ட சேவையை வழங்குதல்
மேற்படி விவரங்களை பெற எங்களுடன் தொடர்பு கொள்ள விவரங்களை கொடுத்தல்
- உங்களுக்கு சிக்கலான கேள்வி இருந்தால் உங்களுக்கு உதவக்கூடிய ஒருவருடன் தொடர்பு கொள்ள வைக்கப்படுவீர்கள்
- உங்களைத் தொடர்புகொள்வதாக கூறினால், நாங்கள் தொடர்புகொள்ளுவோம்
- உங்கள் கேள்வி உடனடியாக பதிலளிக்க முடியாவிட்டால், உங்கள் தொடர்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கூடிய விரைவில் பதிலளிக்கப்படும்
- உங்கள் விசாரணைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய பதில்களை சரியான நேரத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது
- எங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்டு அவற்றை விரைவாக சரிசெய்யப்படும்
- நாங்கள் வெளியிட்ட தகவல்களிலும், நாங்கள் பேசும்போதும் அல்லது எழுதும்போதும், எளிய மற்றும் தெளிவான மொழியைப் பயன்படுத்துவோம்
- எங்கள் வலைத்தளத்தில் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில், எங்களின் சில தகவல்கள் வழங்கப்படுகின்றன
- உங்களுக்கான ஆலோசனை மற்றும் தகவல்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டாலும், டிஜிட்டல் சாராத படிவத்தை தேவைப்பட்ட பொழுது உபயோகிக்கலாம்.
- ஆலோசனை மற்றும் தகவல், அணுகல் மூலம் வழங்க
உங்கள் விருப்பப்படி ஒரு நபரால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆலோசனை பெறலாம்
நீங்கள் உங்கள் விவகாரங்களில் மற்றும் எங்களுக்கு கையாள்வதிலும் உதவி பெறலாம் வெவ்வேறு விஷயங்களில் உங்களை வெவ்வேறு பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்தலாம். வருமான வரி தயாரித்தல், செயல்பாட்டு அறிக்கைகள், மதிப்பீடுகளுக்கு எதிரான எதிர்ப்புகள் மற்றும் உங்கள் விவகாரங்களைப் பற்றி ஆலோசனையைப் பெறலாம்.
வருமானவரி அல்லது பிற வரி ஆவணங்களை தயாரித்தது பதிவு செய்த வருமானவரி முகவர் என்றாலும், நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்களின் துல்லியத்திற்காக நீங்கள் பொறுப்பாக இருக்கின்றீர்கள்.
ஒரு நபர் உங்கள் சார்பாக செயல்பட வேண்டும் அல்லது உங்கள் விவகாரங்களை எங்களுடன் கலந்துரையாட வேண்டுமெனில் நீங்கள் எங்களிடம் சொல்ல வேண்டும்.
பெரும்பாலான சூழ்நிலைகளில், உங்களுக்கு உதவ எந்தவொரு நபரையும் நீங்கள் தேர்வு செய்யலாம், ஆனால் சட்டங்கள்இந்த உதவி வழங்குவதற்கு கட்டணத்தை வசூலிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு பதிவு செய்யப்பட்ட வரி முகவர் அல்லது BAS முகவர் (பதிவு முகவர்) மட்டுமே வரி முகவர் சேவைகளை வழங்குவதற்கான கட்டணத்தை வசூலிக்க முடியும்.
வரி முகவர் சேவைகளை கட்டுபடுத்துவதற்காக, Tax Practitioners Board பொறுப்பாகவுள்ளது.
நீங்கள் பிரதிநிதி ஒருவரைத் தேர்வு செய்தால், அவர்களுக்கும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உள்ள அதே உரிமைகள் மற்றும் கடமைகள் உண்டு.
மேலும் பார்க்க
உங்கள் தனிப்பட்ட உரிமைகளை மதிக்கின்றோம்
வரி மற்றும் ஓய்வூதிய சட்டங்களை நிர்வகிப்பதற்கு, நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை சேகரிக்கிறோம். உங்களிடமிருந்தோ, உங்கள் பிரதிநிதியிடமிருந்தோ, பிற அரசாங்க நிறுவனங்களிலிருந்தோ மற்றும் வங்கிகள் போன்ற பிற கட்சிகளிடமிருந்தோ நாங்கள் இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் உங்கள் தகவலை ரகசியமாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் தனியுரிமையை நாங்கள் மதிக்கிறோம் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், உங்கள் தகவல்fளை மற்றவர்களிடம் தெரிவிக்க சட்டம் எங்களை அனுமதிக்கிறது. உதாரணமாக, அனைத்து அரசு தரவு பொருந்தும் வழிகாட்டுதல்களுக்குExternal Link இணங்க எங்கள் தரவு பொருந்தும் திட்டங்கள் உள்ளன.
உங்களுடைய தனியுரிமை அல்லது உங்கள் வரித் தகவலின் இரகசியத்தன்மை எங்கள் நடவடிக்கைகளால் சமரசம் செய்யப்பட்டது என நீங்கள் நினைத்தால், உங்கள் கையாளும் வரி அதிகாரியுடன் முதல் படியாக தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யவும் (அல்லது உங்களுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்).
உங்களுக்கு திருப்தி இல்லாவிட்டால் வரி அதிகாரிகளின் மேலாளரை தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் இன்னும் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் புகார் படிவம் அல்லது தொலைபேசி 1800 199 010 பயன்படுத்தி புகார் செய்யலாம்.
தனியுரிமை ஆணையர்
உங்கள் புகாரை கையாளும் விதத்தில் திருப்தி இல்லை என்றால், Privacy Commissioner உங்களுக்கு உதவ முடியும். Privacy Commissioner பற்றிய கூடுதல் தகவல்கள், தனியுரிமைக் கோப்பகத்தின் வலைத்தளத்திலிருந்து oaic.gov.auExternal Link கிடைக்கின்றன அல்லது நீங்கள் 1300 363 992தொலைபேசியைப் அழைத்துப் பெறலாம்.
மேலும் பார்க்க
உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தகவல் ரகசியமாக வைத்திருக்கப்படும்
உங்கள் தகவலை பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்க வேண்டும். நாங்கள் பிணைக்கப்பட்டுள்ளோம்.
உங்கள் தனிப்பட்ட தகவல் குறித்த பாதுகாப்பையும், அந்தரங்கத்தன்மையையும் நாம் மிகவும் முக்கியமாக கருதுகிறோம். எம்முடனான உங்கள் தரவுகளும் மற்றும் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களும் பத்திரமாகவும் அத்துடன் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் நடவடிக்கைகளைக் கொண்டிருக்கிறோம்.
எமது வேலையின் அங்கமாக அவசியமாகின்ற போது மட்டுமே அல்லது சட்டம் எம்மை அனுமதிக்கின்றவிடத்து, உங்களைப் பற்றிய தகவலை எம்மால் நோக்க, பதிவுசெய்ய, கலந்துரையாட அல்லது வெளியிட மட்டுமே முடியும். நாம் வழங்குகின்ற சேவையின் தரத்தைக் மதிப்பீடு செய்ய அல்லது அவசியப்படுமிடத்து சட்டத்தை நிர்வகிப்பதற்கு நாம் தொலைபேசி அழைப்புக்களைப் பதிவுசெய்கின்றோம். அரசாங்க நன்மைகளுக்கான தகைமையைச் சரிபார்ப்பதற்கும், சட்டத்தை வினைப்படுத்துவதற்குமே உங்கள் தகவலை வெளிப்படுத்துவதற்கான பொதுவான காரணங்களாகும்.
உங்கள் அலுவல்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு நீங்கள் எங்களுடன் தொடர்பு கொண்டால், உங்கள் அடையாளத்தின் சான்றினை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட தகவல் உங்களுக்கு அல்லது உங்கள் சார்பாக செயற்படுவதற்கு அவர்கள் அங்கீகாரத்தைக் கொண்டுள்ளதைக் காட்டும் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. உதாரணமாக, நீங்கள் எங்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால், உங்கள் பிறந்த திகதி, உங்கள் விலாசம் (எமக்கு ஏற்கனவே அறிவித்துள்ளவாறு) அத்துடன் ATO- தோற்றுவிக்கப்பட்ட அறிவித்தலொன்றிலிருந்து விபரங்கள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் உங்கள் அடையாளத்தை நீங்கள் நிரூபிக்க முடியும். உங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து, சான்றாக வேறு தகவல்களை பயன்படுத்தப்பட முடியும்.
மேலும் பார்க்க
உங்களைப் பற்றி நாம் வைத்திருக்கும் தகவலுக்கான அணுகல் உங்களுக்கு தரப்படுகின்றது
The உங்களைப்பற்றி நாம் வைத்துள்ள தகவலுக்கான உரிமையை, தகவல் சுதந்திரச் சட்டம் 1982 (த.உ.சட்டம் (FOI Act)), உங்களுக்கு வழங்குகின்றது. பொதுசனத் தீர்ப்புக்கள், ATO நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் போன்ற தீரமானங்களை எடுப்பதற்கு எமக்கு உதவுகின்ற ஆவணங்களையும் உங்களால் அடைய முடியும்.
எமது இணையத்தள அலைவரிசைகள் ஊடாக உங்களுக்கு கிட்டாத ஏதேனும் எமது ஆவணங்களை அடைவதற்கு நீங்கள் விரும்பினால், எம்முடன் முதலில் தொடர்பு கொள்ளுங்கள். தகவல் கோரிக்கையின் சுதந்திரம் இல்லாமல், பெரிதுமே பொதுவான விதத்தில் கோரப்பட்டுள்ள ஆவணங்களின் பிரதிகளை எம்மால் வழங்க முடியும். உதாரணமாக, ஏதேனும் அண்மைய மதிப்பீட்டு அறிவித்தல்களின் பிரதியொன்று இலவசமானதாகும். ஏதேனும் அண்மைய வரி வருவாய்களின் விபரத் திரட்டுக்களுக்கு ஒரு சிறிய கட்டணம் இருக்கலாம் என்ற போதிலும், அவற்றின் பிரதிகளை எம்மால் வழங்க முடியும்.
உங்களைப் பற்றி நாம் வைத்துள்ள தனிப்பட்ட தகவல்; முழுமையற்றது, தவறானது அல்லது வழக்கொழிந்தது அல்லது தவறாக வழிகாட்டுகின்றது என நீங்கள் நினைத்தால், அதை மாற்றுவதற்கு எம்மிடம் கேட்பதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.
உதாரணமாக, விசாரணையொன்றின் வெளிப்படுத்தல் நியாயபூர்வமான தன்மையில் தப்பெண்ணத்தை ஏற்படுத்தினால் அல்லது சட்டத்தை சரியாக நிருவகிப்பதைத் தடைசெய்தால், த.உ. சட்டத்திலிருந்து அவை விதிவிலக்கானவையாகும் என்ற காரணத்தினால் சில ஆவணங்களுக்கான அனுமதியை உங்களுக்கு நாம் வழங்கமாட்டோம்.
தகவல் கோரிக்கைகளின் சுதந்திர ம் வழியாக தகவல் பெற கொடுக்க வேண்டிய கட்டணம் சட்டத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க
விடயங்களை சரியாகச் செய்வதற்கு உங்களுக்கு உதவுகின்றோம்
உங்கள் உரிமைகளையும், உரித்துக்களையும் நீங்கள் புரிந்துகொள்வதற்கு உதவுவதற்காகவும், உங்கள் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் துல்லியமான, நிலையான மற்றும் தெளிவான தகவலை வழங்குவதை நாம் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்.
நாங்கள் வெளியிட்டுள்ள தொகுப்புகளில் சட்டம் பொதுவாக எல்லோருக்கும் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு தேவையான அறிவுரையும் உள்ளன.
எமது வெளியிடப்பட்ட தகவல் உங்கள் சூழ்நிலைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை அல்லது அது உங்களுக்கு எவ்வாறு பிரயோகமாகின்றது என்பன குறித்து நீங்கள் நிச்சயமற்றிருப்பதாக நினைத்தால், உங்கள் தேவைகளுக்கு எந்தத் தகவல் மிகவும் பொருத்தமானது என்பதையிட்டு உங்களுக்கு உதவுவதற்காக எம்முடன் அல்லது வாழ்க்கைத்தொழில் முறை ஆலோசகர் ஒருவருடன் தொடர்புகொள்ளுங்கள்.
எமது தகவல் தவறானது அல்லது தவறாக இருந்தது என்றால்
நீங்கள் எங்களுடைய தகவலைப் பின்பற்றி, அது தவறாக அல்லது தவறாக வழிநடாத்தி, இதன் விளைவாக நீங்கள் தவறொன்றைச் செய்தால், ஏதேனும் நடந்தால், என்ன நடவடிக்கை அவசியம் என்பதை நிர்ணயிக்கும் போது அதை நாம் கணக்குக்கு எடுத்துக்கொள்வோம்.
எங்கள் தகவலை எவ்வாறு அணுகுவது
எங்களுடைய இணையத்தளத்திலிருந்து தகவலை அணுகலாம் அல்லது எமது அச்சிடப்பட்ட வெளியீடுகளின் பிரதிகளை நீங்கள் தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். எமது தகவலைஅடைவதற்கு அதைச் சாத்தியமானளவு இலகுவாக்குவோம், மேலும் எம்மைத் தொடர்பு கொள்ளும் சமகால வழிவகைகளையும் உங்களுக்கு வழங்குவோம். உங்களால் முடியும்:
மேலும் பார்க்க
உங்களைப் பற்றி நாம் எடுத்துள்ள முடிவுகளை விளக்குகின்றோம்
உங்கள் விவகாரங்கள் பற்றி நாம் செய்துள்ள தீர்மானத்தை உங்களுக்கு நாம் விளக்குவதுடன், உங்கள் விடயத்தை கையாளும் ATOஇன் பகுதிக்கான தொடர்பு இலக்கமொன்றை அல்லது மின்னஞ்சல் விலாசத்தை நாம் வழங்குகின்றோம். எமது தீர்மானங்களை நாம் தெளிவாக விளக்குவோம். நாம் தவறொன்றைச் செய்துள்ளோம் அல்லது எமது தீர்மானத்திற்கு போதியளவு காரணங்களை வழங்கவில்லை என்பன குறித்து நீங்கள் கேள்விகளைக் கொண்டிருந்தால், உங்களுக்கு அல்லது உங்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியினைப் பயன்படுத்தி எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
பொதுவாகவே, எமது தீர்மானம் குறித்து எழுத்திலேயே நாம் விளக்கமளிக்கின்றோம். எமது தீர்மானத்தை நாம் வாய்மொழியாக வழங்கினால், அதே நேரத்திலேயே எமது விளக்கத்தையும் உங்களுக்கு அளிப்போம். சில மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில், எம்மால் முடியுமானளவு அதிகளவு தகவலை இன்னுமே நாம் வழங்குகின்ற போதிலும், எமது தீர்மானங்களை முழுமையாக விளக்கமளிப்பதற்கு எம்மால் இயலாதிருக்கும். உதாரணமாக, என்றால்:
- இன்னொரு நபர் சம்பந்தப்பட்டிருந்தால், எமது தீர்மானம் பற்றிய தகவலை விடுவிப்பது அவர்களது தனியுரிமையை அல்லது வரிச் சட்டங்களில் உள்ள இரகசியத்தன்மையிலான விதிகளை மீறக்கூடும்
- நாம் மோசடி என சந்தேகித்தால், எமது விசாரணகளை தகவல் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற காரணத்தினால் அதை நாம் விடுவிக்கமாட்டோம்.
1997 நிர்வாகத் தீர்மானங்கள் (நீதித்துறை மதிப்பாய்வு) சட்டத்தின் (நி;.தீ.நீ.ம.) கீழ், உங்கள் வரி விவகாரங்கள் பற்றி நாம் எடுத்துள்ள சில திர்மானங்களுக்கான காரணங்களைக் குறித்துரைக்கும் இலவசமான எழுத்து மூல அறிக்கையொன்றைப் பெறுவதற்கு நீங்கள் உரிமையைக் கொண்டிருக்கிறீர்கள். சகல தீர்மானங்களையும் சட்டம் உள்ளடக்குவதில்லை என்பதுடன், சில முக்கியமான விதிவிலக்குகள் உள்ளன - உதாரணமாக: மதிப்பீடுகள் பற்றிய தீர்மானங்கள்.
மேலும் பார்க்க
மதிப்பாய்வொன்றுக்கான உங்கள் உரிமையை மதிக்கின்றோம்
உங்கள் விவகாரங்கள் பற்றிய தீர்மானமொன்றை நாம் உங்களுக்கு வழங்கும் போது, தீர்மானத்தை நீங்கள் எவ்வாறு மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் மதிப்பாய்வொன்றைக் கோருவதற்கு கால வரையறைகள் உள்ளனவா என்பன பற்றி நாம் விளக்கமளிப்போம்.
பல்வேறு மதிப்பாய்வு விருப்பங்கள் இருந்தால், இவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை நாம் விளக்குவோம். சில மதிப்பாய்வுகள் சட்டத்தின் கேள்விகளை நோக்கும் என்பதுடன், ஏனையவை தீர்மானத்தை அடைவதில் நாம் சரியான நடைமுறையைப் பின்பற்றினோமா என்பதை உறுதிப்படுத்துகின்றது.
விரைவில் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சாத்தியமான வழிகளில் நாம் உங்களுடன் பணியாற்றுவோம். நாம் தவறு செய்திருந்தால், எம் இருவருக்கும் குறைந்தபட்ச விலையில் அதைத் திருத்துவதற்கு விரும்புகின்றோம்.
நாங்கள் எடுத்த முடிவை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், நாங்கள் வழங்கிய தொடர்பு விவரங்களைப் பயன்படுத்தவும்.
மூலத்தீர்மானத்தில் சம்பந்தப்படாத சுதந்திரமான அலுவலர் ஒருவர் மதிப்பாய்வை நடத்துவார்.
எமது மதிப்பாய்வுத் தீர்மானத்துடன் நீங்கள் இணங்காவிட்டால், சுதந்திரமான, வெளிவாரி மதிப்பாய்வொன்றை நீங்கள் கேட்கலாம். சில முடிவுகளுக்கு எதிராக, நிர்வாக முறையீட்டு நீதிமன்றத்திற்கு விண்ணப்பம் செய்வது அல்லது பெடரல் நீதிமன்றத்திற்கு முறையீடு செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு உண்டு. நீதிமன்றங்கள், விசாரணை மன்றுகள் முன்னால் உள்ள தயாரிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள், மத்தியஸ்தத்திலும் மற்றும் வேறு மாற்று பிணக்கு தீர்த்துவைத்தல் நடைமுறைகளிலும் உள்ள விசாரணைகள் ஆகியனவற்றை உள்ளடக்கும் எமது மாதிரி வழக்காளி கடப்பாடுகளை நாம் நிறைவேற்றுவோம்.
மேலும் பார்க்க
நஷ்ட ஈடு
சில சூழ்நிலைகளில், நீங்கள் நஷ்ட ஈடு பெறுவதற்கு தகுதி பெறலாம் எங்கள் நடவடிக்கைகள் நேரடியாக உங்களை ஒரு நிதி இழப்புக்குள்ளாக்குவதாக உணர்ந்தால், எங்கள் வலைத்தளத்தின் ஊடாகவோ அல்லது கட்டணமற்ற தொலைபேசி இலக்கம் 1800 005 172மூலமாகவோ இழப்பீட்டுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் பார்க்க
புகார் செய்ய உங்கள் உரிமையை உணர்ந்து கொள்ளுங்கள்
எங்கள் முடிவுகளிலோ, சேவைகளிலோ அல்லது செயல்களிலோ நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், அல்லது சாசனத்தை நாங்கள் பின்பற்றவில்லை எனில், நீங்கள் புகார் செய்யலாம்.
நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
- உங்கள் பிரச்சனையை முதலில் நீங்கள் கையாளுகிற வரி அலுவலர் மூலம் தீர்த்துக்கொள்ளுங்கள் (அல்லது கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்)
- நீங்கள் திருப்தி அடையவில்லையெனில், வரி அலுவலரிடம் பிரச்சினையை தெரிவிப்பது கடினம் என்றால், வரி அதிகாரிகளின் மேலாளரிடம் பேசுங்கள்
- உங்கள் புகார் கையாளப்படுகையில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், எங்கள் புகார் தொலைபேசி எண் 1800 199 010அழையுங்கள்.
நீங்கள் புகார் செய்யலாம்
நாங்கள் புகார்களை தீவிரமாக கருதுகிறோம். எவ்விதமான பிரச்சனையோ அல்லது புகார்களோ எங்களிடம் தெரிவித்தால், அவற்றை விரைவாகவும் நியாயமானவையாகவும் தீர்க்க முயற்சிப்போம் புகார்கள் எங்களுக்கு பின்னுாட்டங்களைத் தருகின்றன, அவை எங்கள் சேவையை எப்படி மேம்படுத்தலாம் என்பதைக் கண்டறிய உதவுகின்றன.
மேலும் பார்க்க
Inspector-General of Taxation
உங்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், முதலில் அதை எங்களுடன் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் புகாரை நாங்கள் கையாண்ட முறை உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் Inspector-General of Taxation உங்களுக்கு உதவ முடியும்.
அடுத்த படிகள்:
நீங்கள் இணங்குவதை எளிதாக்குகிறது
உங்கள் தொடர்புகளை எங்களுடன் நேரடியாகவும், முடிந்தவரை வசதியாகவும் செய்ய முயற்சிக்கிறோம்.
- உங்கள் கடப்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கும் அத்துடன் அவற்றை நிறைவேற்றுவதற்கும் அதை உங்களுக்கு இலகுவாக்குவோம்
- சம்பந்தப்பட்டுள்ள வேலைச்சுமையையும், நேரத்தையும் மற்றும் முயற்சியையும் குறைப்பதன் மூலம் இணங்குவதற்கு உங்களுக்கு அதை இலகுவாக்குவோம்
- உங்களுக்கான அறிவை வழங்குவதற்கும் அத்துடன் நீங்கள் நாளாந்தம் பயன்படுத்தும் முறைமைகளுடன் பொருந்துவதற்கும் தயாரிப்புக்களையும், சேவைகளையும் முன்வைத்தல்
- டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சமகால தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் சேவைகளை வழங்குதல்.
இதை திறம்பட செய்ய நாம்
- சமூகத்துடன் தவறாமல் ஆலோசனை செய்தல்
- எமது தயாரிப்புக்களினதும், சேவைகளினதும் வடிவமைப்பில் சமூகத்தைச் சம்பந்தப்படுத்துதல்
- டிஜிட்டல் உள்ளிட்ட தயாரிப்புக்களைப் பயன்படுத்தும் மக்களின் தேவைக்கேற்ப அனுசரித்தல்
- தயாரிப்புக்களைப் பயன்படுத்தும் மக்களுடன் மாதிரி தயாரிப்புகளை யும், சேவைகளையும் சோதனை செய்தல்.
பொறுப்புக் கூறுதல்
பொறுப்புக் கூறுவதற்கான அவசியத்தையும் அத்துடன் இந்த சாசனத்தில் செய்யப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவசியத்தையும் நாம் மிகவும் முக்கியமாக கருதுகிறோம்.
உங்கள் விவகாரங்கள் குறித்து நாம் தீர்மானமொன்றை எடுக்கும் போது, அந்தத் தீர்மானம் குறித்து நாம் விளக்குவதுடன், அது தொடர்பிலான உங்கள் உரிமைகளையும், கடப்பாடுகளையும் பற்றி உங்களுக்கு கூறுவோம். நீங்கள் ஏதேனும் விசாரணைகளைக் கொண்டிருந்தால் அல்லது மேலதிக தகவல் அவசியமென்றால் உங்களுக்கு தொடர்பு விவரங்கள் கொடுக்கப்படும்.
ஒரு சிக்கலை விரைவாக தீர்க்க முடியவில்லை என்றால், எமது முன்னேற்றம் குறித்து நாம் உங்களுக்கு அறிவிப்போம். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சகல நியாயமான நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்.
எமது இணையதளம் மீது சேவை (நேரம் தவறாமை) நியமங்களுக்கு எதிராக எமது செயல்திறனை நாம் வெளியிடுகின்றோம்.
மேலும் பார்க்க
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் நமது செயல்களின் முடிவுகள் பற்றிய பொது தகவல்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
சமூகத்தை ஆய்வு செய்து, நாங்கள் எங்கள் தொழில் முறைமை மற்றும் எங்களது சட்டப்பூர்வ கடமைகளை நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம்.
நாங்கள் பாராளுமன்றத்திற்கும், ஓஸ்ரேலிய சமூகத்திற்கும் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளோம்.
மேலும் பார்க்க
உங்கள் கடமைகள்
நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது:
உண்மையாக இருத்தல்
முழுமையான மற்றும் துல்லியமான தகவலை வழங்குவதன் அடிப்படையில் வரி மற்றும் மூப்பு ஓய்வு நிதி முறைமைகள் உள்ளன. இதில் அடங்குவன:
- உங்கள் வரி வருமானம், செயல்பாட்டு அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களில் மிகச் சரியான தகவலை வழங்குதல்
- நீங்கள் ஆலோசனை பெறும்போது முழு உண்மைகளையும் சூழ்நிலைகளையும் வழங்குதல்
- முழுமையாக, துல்லியமாகவும் நேர்மையாகவும் கேள்விகளுக்கு பதிலளித்தல்.
மேலும் பார்க்க
தேவைப்படும் பதிவுகளை வைத்திருப்பது
நீங்கள் வைத்திருக்க வேண்டிய பதிவுகளை சட்டம் சொல்கிறது.
நல்ல பதிவுகளை வைத்திருப்பது, துல்லியமான வரி வருமானம், செயல்பாட்டு அறிக்கைகள் மற்றும் பிற ஆவணங்களை தயாரிக்கவும், அதேபோல் உங்கள் நிதி விவகாரங்களை கண்காணிக்கவும் உங்களிற்கு உதவுகிறது. பொதுவாக, உங்கள் பதிவுகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஐந்து ஆண்டுகளாக வைத்திருத்தல் வேண்டும்.
பல்வேறு சூழல்களுக்கு ஏற்ப பதிவு செய்யும் வகையில், பல தரப்பட்ட தகவல்களை நாங்கள் வெளியிடுகிறோம். நீங்கள் மேலும் தகவல்களை பெற விரும்பினால், எங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் பார்க்க
நியாயமான கவனிப்பு எடுத்தல்
உங்கள் வரி வருமானங்கள், செயல்பாட்டு அறிக்கைகள் மற்றும் நீங்கள் வழங்கிய பிற ஆவணங்களில் முழுமையான மற்றும் துல்லியமான தகவலை வழங்க நீங்கள் நியாயமான கவனத்தை எடுத்தல் வேண்டும். அதாவது, உங்கள் சூழ்நிலையில் நியாயமான ஒரு நபர் தங்கள் கடமைகளை நிறைவேற்ற எடுக்கும் ஏற்பாடுகளை நீங்களும் எடுக்க வேண்டும் என்பதாகும்.
ஒரு பதிவு முகவர் உட்பட, உங்களுக்கு உதவுகிறவர்கள் யார் என்றாலும், உங்கள் விவகாரங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.
மேலும் பார்க்க
நிலுவைத் திகதியின் படி தாக்கல் செய்தல்
வரி வருமானங்கள், செயல்பாட்டு அறிக்கைகள், பிற ஆவணங்கள் மற்றும் தகவல்கள் குறிப்பிட்ட திகதிகளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்தத் திகதிகளுக்குள் உங்களுக்கு சிரமமாக இருப்பின், ஆவணம் அல்லது தகவல் சமர்ப்பிக்க முடியாவிட்டால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, நாங்கள் உங்களுக்கு தாக்கல் செய்ய, கூடுதல் நேரம் வழங்க முடியும்.
நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்த முடியாவிட்டாலும், உங்கள் வரி வருவாய் அல்லது செயல்பாட்டு அறிக்கையை நீங்கள் தகுந்த நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் செலுத்த வேண்டியதற்காக, கூடுதல் நேரத்தை நாங்கள் அனுமதிக்கலாம் ('நிலுவைத் திகதியின்படி செலுத்துதலை' பார்க்கவும்).
நீங்களைச் சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் அபராதங்கள் விதிக்கப்படலாம்.
மேலும் பார்க்க
நிலுவைத் திகதியின்படி செலுத்துதல்
நீங்கள் நிலுவைத் திகதியின்படி செலுத்த வேண்டிய வரிகளையும் நீங்கள் செலுத்த வேண்டிய பிற கட்டணங்களையும் செலுத்த வேண்டும். உங்களுக்கு சிரமங்கள் இருந்தால், உங்கள் நிலைமையை பற்றி கலந்துறையாட, முடிந்தவரை விரைவில் நிலுவைத் திகதியின் முன், எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். வட்டிக்கு கட்டணம் இல்லாமல் உங்கள் நேரத்தை நீட்டிக்கவோ அல்லது தவணைகளால் பணம் செலுத்தவோ கூடிக் கலந்துபேசி முடிவுசெய்யலாம். நீங்கள் நீட்டிக்கப்பட்ட பணம் செலுத்தும் ஏற்பாட்டிற்குள் நுழைந்தாலும், நீங்கள் ஏற்கெனவே ஏதேனும் தாமதமான பணம் செலுத்துதல்களுக்கு வட்டி செலுத்த வேண்டும்.
மேலும் பார்க்க
ஓத்துழைப்பாக இருப்பது
உங்களோடு ஒத்துழைக்க நாங்கள் விரும்புகிறோம், அத்துடன் உங்கள் கடமைகளை தன்னார்வமாக பெற்றுக்கொள்வதற்கும் உதவுகின்றன. நீங்கள் ஒத்துழைக்காமல் இல்லையென்றால், நாங்கள் உங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, எமக்கு தேவைப்பட்டால் முறையான அணுகல் மற்றும் தகவல் சேகரிக்கும் அதிகாரங்களும் உள்ளன. தடங்கலான தடைசெய்யக்கூடிய மக்கள் தண்டிக்கப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்படும்.
எங்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அதே மரியாதை, மதிப்புடன் எங்களையும் நீங்கள் கருத்தில் கொண்டு மதிக்குமிடத்து, எங்களிடமிருந்தும் கிடைக்கும். நாங்கள் முரட்டுத்தனமாக அல்லது தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டால், நாங்கள் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நன்மையான நல்வாழ்விற்காக ஒரு நேர்காணலை அல்லது தொலைபேசி அழைப்பை முடித்துக்கொள்ள வேண்டிவரும்.
The Taxpayers' Charter outlines your rights and responsibilities as a taxpayer when dealing with the ATO. It details dealings between the taxpayer and the ATO.