ஆஸ்திரேலிய வரியிறுப்பு அலுவலக'(Australian Taxation Office (ATO)) த்தினது வலைத்தலம் உங்களை வரவேற்கிறது
உங்களுக்குள்ள உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை விளங்கிக்கொள்ள உங்களுக்கு உதவுவதற்காக வரி மற்றும் ‘சூப்பர்-ஆன்யூவேஷன்' எனப்படும் ஓய்வூதியத்தைப் பற்றிய தகவல்கள் இந்தப் பக்கங்களில் உள்ளன.
இந்தப் பக்கங்களில் காணப்படும் தகவல்கள் உங்களுடைய சூழல்களுக்குப் பொருத்தமானவையாக இல்லை என்றாலோ, உங்களுக்கு இந்தத் தகவல்கள் பொருந்துகின்றனவா இல்லையா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ, எம்மிடமிருந்து நீங்கள் மேலதிக உதவி நாடலாம்.
எம்முடன் நீங்கள் பேசவேண்டுமாயின், தொலைபேசி மூலம் எம்மை அழையுங்கள்:
- தனிப்பட்ட விசாரிப்புகள் - 13 28 61
- தனிப்பட்ட விசாரிப்புகள் - 13 28 66
- ‘சூப்பர்ஆன்யூவேஷன்’ விசாரிப்புகள் - 13 10 20
- ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியில் நீங்கள் பேச விரும்பினால், Translating and Interpreting Service (TIS National)-ஐ காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரைக்குமான இடைப்பட்ட நேரத்தில் 13 14 50 -இல் நீங்கள் அழைக்கலாம். உங்களுடைய விசாரிப்பில் உங்களுக்கு உதவுவதற்காக மொழிபெயர்த்துரைப்பளர் ஒருவருடன் இந்த சேவை எம்மை அழைக்கும்.